கவிதைகள்வாழ்வியல்

கொரோனா விழிப்புணர்வு கவிதை! கவிஞர் காரை வீரையா…

உலகம் முழுமையும் கொரோனா
வூகானில் உற்பத்தித் தொடக்கம்
ஏகபோக விளைச்சல் கண்டினன்
எல்லா நாட்டுக்கும் ஏற்றுமதியாக்கினன் ஏற்றுமதிக்கு விலையேதும் கேட்காமலே  இலவசம் இலவசமென்று கொக்கரித்தனன்

அய்யகோ ஏழையர் நெஞ்சினிற் ஈட்டியொன்று விழுந்திடல் கூட
செப்பு வாய்வழியிற் சிரித்திடுவரே

படுபாவி மனித ரன்றோ
பாறாங்கல்லில் இதயம் செய்து பாராமுகமாய் இருந்து கொண்டு பார்முழுதும் ஏர்பிடித்து உழுதுவிட்டனரே வேர்விட்டு விளைந்த தன்றோ
இந்தக் கொரோனா..

மனித உயிருக்கு காவு கேட்கும்
இந்தக் கொரோனா
இயற்கையா? செயற்கையா?
செப்புங்கள் நீங்கள் செப்புங்கள்!

செப்பினன்   செப்பினன்
ஜப்பானின் மருத்துவ மைந்தன்
நோபல் பாரிசாளன் தாசுரு ஹொன்ஜோ… செயற்கையென்று போட்டு உடைத்தனன் தன் நாற்பதாண்டு கால ஆராய்ச்சியினால்…

அகிம்சை ஒன்றினால்
அந்நியன் அடிமைத்தனம்
அழிக்கப்பட்டு அமைதிப்
பூங்காவெனும் சுதந்திரம் பெற்றோம்

எழுபத்தி மூன்றாண்டுகளுக்கு
பின்னர் மக்கள் இதயங்களை
சுக்கல் சுக்கலாக்கும்..
இந்தக் கொரோனா போரில்
நாம் என்ன செய்ய வேண்டும்!

நம்மிடம் தரைவழி வான்வழி நீர்வழி ராணுவங்கள் ஏராளம் அச்சுறுத்த நினைப்பவன் கூட அண்ணார்ந்து பார்த்துவிட்டு அலறியடித்து ஓடி ஒளிவான்!

ஆனால் இந்தப் கொரோனாவுக்கு  தரைவழி நீர்வழி வான்வழி இராணுவங்கள் தேவையில்லை.

கொரோனாவை கொல்வதற்கும் வெல்வதற்கும் இந்த
மூன்று வழிகள் நிச்சயம் தேவை.

தரைவழியில் தனித்திருப்பது!
வான்வெளியில் முகம் மூடியிருப்பது!
நீர்வழியில் விழித்திருப்பது!

நன்றி 
கவிஞர் காரை வீரையா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *