தினகரன் – தடாலடியாக உயர்ந்த தங்க விலை… ஒரே நாளில் ரூ. 216 அதிகரிப்பு… ஒரு சவரன் ரூ.38,304க்கு விற்பனை!!
தடாலடியாக உயர்ந்த தங்க விலை… ஒரே நாளில் ரூ. 216 அதிகரிப்பு… ஒரு சவரன் ரூ.38,304க்கு விற்பனை!!
சென்னை : தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 216 அதிகரித்துள்ளது.தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்தனர்.பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன. கடந்த 3 நாட்களாக தொடர்ந்து தங்கம் விலை இறங்குமுகமாகவே இருந்து வந்து நிலையில் இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. .
அதன்படி, இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.27 அதிகரித்து ரூ.4788 -க்கு விற்பனையாகிறது. அதே போல், பவுனுக்கு ரூ.216 அதிகரித்து ரூ.38,304க்கு விற்பனையாகியது. இதேபோல் வெள்ளியின் விலை 10 காசுகள் அதிகரித்து 67.20 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வரும் நாட்களில் விஷேச தினங்கள் மற்றும் தீபாவளி போன்ற பண்டிகைகள் வர உள்ளது. இந்த நேரத்தில் தங்கம் விலை உயர்வு நகை வாங்க நினைப்போரை சற்று அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.