கவிதைகள்வாழ்வியல்

மாமனிதர் கக்கன்!கவிஞர் இரா. இரவி


தும்பைப்பட்டியில் பிறந்த தூயமனிதன் கக்கன்
துறைகள் பல கைவசம் இருந்தும் ஆடாதவர்!

நேர்மையின் சின்னமாக வாழ்ந்து வந்தவர்
நல்லவர் காமராசருக்குத் துணை நின்றவர்!

உடலால் மட்டுமல்ல உள்ளத்தாலும் உயர்ந்தவர்
ஒருபோதும் தன்னலம் விரும்பாத புனிதர்!

கையூட்டு என்றால் என்னவென்று அறியாதவர்
கொண்ட கொள்கையில் குன்றென நின்றவர்!

வறுமை வாட்டியபோதும் செம்மையாக வாழ்ந்தவர்
வளங்கள் சேர்த்துக் கொள்ளாத நல்லவர்!

நினைத்து இருந்தால் கோடிகள் திரட்டி இருக்கலாம்
நினைத்தது இல்லை எப்போதும் குறுக்கு வழிகளை !

அரசு மருத்துவமனையில் தரையில் படுத்தவர்
அங்கு வந்த எம்.ஜி.ஆர். படுக்கை வழங்கினார்!

முன்னாள் அமைச்சர் என எங்கும் உரைக்காதவர்
மனிதரில் புனிதனாக வாழ்ந்து நிலைத்தவர்!

அரசியல்வாதிக்கு இலக்கணமாக வாழ்ந்தவர்
அரசியலில் ஊழலுக்கு இடம் வழங்காதவர்!

ஆசையை அறவே அழித்திட்ட புத்தர்
ஆடம்பரம் அறவே வெறுத்திட்ட சித்தர் !

கதராடை தவிர வேறாடை அணியாதவர்
கக்கனுக்கு நிகர் கக்கன் மட்டுமே!

காலங்கள் கடந்தும் நினைக்கப்படுகிறார்
காலம்சென்ற பின்னும் மனங்களில் வாழ்கிறார்

நன்றி
கவிஞர் இரா.இரவி

What's your reaction?

Related Posts

1 Comment

  1. Anandan says:

    நன்று

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *