100 வயது சாத்தியமா? விஸ்வேஸ்வரய்யா கூறிய 10 பொன்மொழிகள்…..
பரபரப்பான வாழ்க்கையில் மனிதன் 100 வயது வரை வாழ்வது… அதாவது, சதம் அடிப்பது சாத்தியம்தான்?
சாத்தியம்தான்! ‘பாரதரத்னா பட்டம் வாங்கிய விஸ்வேஸ்வரய்யா 100 ஆண்டு வரை வாழ்ந்தவர். நோய்நொடி அவரை அணுகியதில்லை. உங்களுடைய நீண்ட ஆயுளின் ரகசியம் என்ன?’ என்று அவரிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது தன்னுடைய பத்து விரல்களை காட்டிவிட்டு ஒவ்வொன்றாய் மடக்கிக்கொண்டே சொன்னாராம்….
1️⃣ பாதி வயிறு உணவு சாப்பிட்டு, கால் வயிறு தண்ணீர் குடித்து, மீதி கால் வயிறு காலியாக இருக்கவேண்டும்.
2️⃣ உதட்டில் எப்போதும் புன்னகை இருக்க வேண்டும்.
3️⃣ எட்டு மணி நேர தூக்கம் கட்டாயம் வேண்டும்.
4️⃣ மனச்சாட்சியின் குரலுக்கு மதிப்புத் தர வேண்டும்.
5️⃣ பிறரை சந்தோஷப்படுத்தி, நீயும் சந்தோசப்பட வேண்டும்.
6️⃣ சம்பாதிக்கும் பணத்தில் வாழ்க்கை நடத்தப் பழகிக்கொள்ள வேண்டும்.
7️⃣ முதுமைப் பருவம் சந்தோசமாகவும், நிம்மதியாகவும், இருக்க வேண்டும் என்றால்…. தங்களின் பெயரில் சிறிது சேமிப்பு இருக்க வேண்டும்.
8️⃣ மனைவியிடம் பிணக்கு இல்லாமல் இணக்கமாய் இருப்பது ரொம்ப முக்கியம்!
9️⃣ பேரன் – பேத்திகள் இருந்தால் அவர்களின் மனநிலைக்கு ஏற்ற மாதிரி விளையாட வேண்டும்.
🔟 எல்லாவற்றுக்கும் மேலாக வாழ்க்கையில் ஒரு லட்சியத்தை குறிக்கோளாக வைத்துக்கொண்டு முழுமனதாய் உழைக்க வேண்டும்.
இந்த பத்தையும் பொன் மொழிகளாய் பாவித்து அவற்றின்படி நடந்தால் 100 வயது நிச்சயம். இதில் ஒன்று குறைத்தாலும் நம் ஆயுளில் 10 ஆண்டுகள் குறைந்துவிடும் !
நன்றி.....