சமுதாய பூக்கள்! கவிஞர் காரை வீரையா..
இரவும் பகலும் இல்லாது போனால்
இனிய உலகம் எங்கே எங்கே எங்கே போகும்
இன்பமும் துன்பமும் இல்லாமற் போனால் அன்பு வாழ்க்கை இங்கே இங்கே வருமா?
(இரவும் பகலும்)
தனக்குத்தானே தாளம் போடும் கைகள் தன்மானம் காக்க எப்போதும் போராட வேண்டும்
புதிய உலகம் பூத்துக்குலுங்க நீ
புறப்பட்ட இடமெல்லாம் புற்றீசல் போல கவிதை மழை பொழிய வேண்டும்
மனித நேயம் எல்லோர்
மனதிலும் புகுந்து விளையாட வேண்டும்
(இரவும் பகலும்)
இரவோ பகலோ எதுவானாலும்
இனிக்கும் உலகில்
விதைக்கும் விதைக்குள்
ஏழ்மை வறுமை முளைக்கக் கூடாது தலைமுறை தலைமுறையாய்
தன்னலம் கருதாப் பொதுவுடைமைச் சமுதாய பூக்கள் பூலோகம் எங்கும்
பூத்துக் குலுங்கும் காலம்
எப்போது வரவேண்டும்.
நன்றி
கவிஞர் காரை வீரையா