அலைபாயுதே மனசு! கவிஞர் காரை வீரையா
(பருவ வயதுக்கு எந்தப் பாவம் தெரியாது. ஆனால் அதை வைத்து உண்மைக் காதலை அழிக்கக் கூடாது என்பதை எடுத்துக் கூறும் பாடல்.)
பருவம் படுத்தும் பாடு
அய்யோ அய்யோ அம்மா அம்மா
கண்கள் இரண்டும் தலைகீழாய்த் தொங்குதே
கால்கள் இரண்டும் பூமிக்கும் வானத்துக்கும் குதியாய் குடிக்குதே- அந்த அழகு தேவதையைக் கண்டதுமே அங்கமெல்லாம் புண்ணாகிக் கொண்டிருக்கிறதே
அய்யோ அய்யோ அம்மா அம்மா
பருவம் வந்து வந்து கூப்பாடு போடும்தே
(பருவம் படுத்தும்)
தொப்புள் கொடிய அறுத்தெறிஞ்சு தொண்டை கிழியக் கத்தி அழுற
பச்சப்புள்ளை பாலுக்கும்
தாய்ப்பாசத்துக்கும் ஏங்கி ஏங்கித் துடிக்குதே
பாழாய்ப் போன பருவ வயசுக்கு மட்டும் பாய்லரில் கொதிக்குற தண்ணிபோல பைத்தியம் பிடிச்சு அலையுதே மனசு- இதக் காதல்ன்னு சொல்லிச் சொல்லி
காட்டாற்று வெள்ளத்திலே நல்ல காதலையும்
தள்ளி விடும் புண்ணியவான்களே!
இந்து மகா சமுத்திரத்தில்
ஈனபுத்தியைக் கொட்டினால்தான் உண்மையான காதலுக்கு உருவம் வரும் நல்ல பருவம் வரும்…. வரும்!
(பருவம் படுத்தும்)
நன்றி
கவிஞர் காரை வீரையா