கவிதைகள்காதல்

காத(லி)ல் கவிதைகள் !  கவிஞர் இரா .இரவி

காத(லி)ல் கவிதைகள் !  கவிஞர் இரா .இரவி

உனைப்பார்க்கும் 
நான் மட்டுமல்ல 
எல்லா ஆண்கள் மட்டுமல்ல 
எல்லாப் பெண்களும் 
வியந்துப் போகிறார்கள் 
இவ்வளவு அழகா ? என்று  !

உனக்கானக் காத்திருப்பு  சுகம்தான் 
வழி மேல் விழி வைத்து மட்டுமல்ல 
வழி மேல் மனதையும் வைத்துக்  காத்திருக்கிறேன் !
தாமதமாகும் நிமிடங்களில் 
உன் மீது கோபம் வந்தாலும்
வந்த கோபம் நீ வந்ததும் 
பறந்து விடுகின்றன !

ஒற்றை ரோஜா தந்தேன் 
திரும்பி விட்டாய் !
வாங்க மறுக்கிறாயோ ?
என்று நினைத்தேன் 
வைத்து விடுங்க !
என்றாய் !
வைத்து விட்ட பின் ரோஜா 
என்னைப்பார்த்து விரல் ஆட்டியது !  

விழிகள் சந்தித்து 
இதயங்கள் இடம் மாறி 
பரிசுப் பொருட்கள் 
பரிமாறியது காதலின் தொடக்கம் !
இதழ்கள் வழி
உமிழ்நீர் பரிமாற்றம் காதலின் பரிணாமம் !
மாலை மாற்றத்திற்குப் பின் 
உடல்கள்  பரிமாற்றம் காதலின் உச்சம் !

ஓரக் கண்ணால் 
ஒரே ஒரு பார்வைதான் பாவை பார்த்தால் !
என்னுள் பரவசம் 
எண்ணிலடங்கா இன்பம் !
பார்வையின் சக்தி 
பார்த்தவர்களுக்குதான் புரியும் !
கூர்ந்து  பார்த்து 
நங்கூரம் இட்டுச் சென்றாள் !
கப்பல் என நின்று விட்டேன் 
நான் அதே இடத்தில 

https://play.google.com/store/apps/details?id=com.maaricare.eraeravi

கவிஞர் இரா .இரவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *