மாமனிதர் எம் .ஜி .ஆர் .! கவிஞர் இரா .இரவி !
மாமனிதர் எம் .ஜி .ஆர் .! கவிஞர் இரா .இரவி !
நூற்றாண்டு கடந்தும் இன்றும் நினைக்கப்படுகிறார்
நாடே கொண்டாடி மகிழ்கின்றது எம் .ஜி .ஆரை !
ஏழ்மையில் பிறந்து வளர்ந்த காரணத்தால்
ஏழ்மை ஒழிக்க முயற்சிகள் செய்தார் !
கொடுத்துக் கொடுத்து சிவந்த கரங்கள்
கண்ணால் கண்ட காட்சிகள் ஆனது !
தோன்றின் புகழோடு தோன்றுக என்று
திருக்குறளுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் !
மனிதநேயத்தின் சின்னமாக வாழ்ந்து சிறந்தவர்
மக்கள் மனங்களில் என்றும் வாழ்பவர் !
நல்லவனாகத் திரைப்படத்தில் நடித்தது மட்டுமன்றி
நல்லவனாகவே வாழ்க்கையில் வாழ்ந்து காட்டியவர் !
ஈழத்தமிழரின் விடுதலையை பெரிதும் விரும்பியவர்
ஈழத்தின் விடுதலைக்கு பெரிதும் உதவியவர் !
ஏழைப்பங்காளன் காமராசரின் மத்திய உணவுத்திட்டத்தை
ஏழைமாணவர் அனைவருக்கும் சத்துணவாக விரிவாக்கியவர் !
வெற்றி மாலைகள் பெற்றுக் குவித்தவர்
வேதனைகள் நீக்கி மகிழ்வைத் தந்தவர் !
என்னுடைய முதல்வர் நாற்காலியில் ஒருகால்
என்பது பட்டுக்கோட்டையின் பாடல்கள் என்றவர் !
நன்றி மறக்காத உயர்ந்த உள்ளம் பெற்றவர்
நாடு போற்றும் பொன்மனச் செம்மல் ஆனவர் !
பொற்காலம் படைத்தது தமிழா வரலாற்றின்
பொன் எழுத்துக்களில் இடம் பிடித்தவர் !
விருதுகள் பல பெற்றபோதும் என்றும்
விவேகமாகச் சிந்தித்து எளிமையாய் வாழ்ந்தவர் !
ஏழைகளின் கண்ணீர் துடைக்க முதல்வராகி
எண்ணிலடங்காத திட்டங்களை நிறைவேற்றியவர் !
திரைப்படத்தில் மிகமிக நன்றாக நடித்தவர்
தமிழக மக்களிடம் என்றும் நடிக்காதவர் !
புன்னகை மன்னராக பூவுலகில் வாழ்ந்தவர்
புரட்சித் தலைவர் எனும் பட்டம் பெற்றவர் !
இன்னும் பல நூற்றாண்டுகள் வாழ்வார் எம் .ஜி .ஆர் .
என்றும் அழிவில்லை எம் .ஜி .ஆர் . புகழுக்கு !
பொன்மனச் செம்மல் எம் .ஜி .ஆர் கவிஞர் இரா .இரவி
தனித்தமிழ் ஈழத்தை ஆதரித்த
தனிப்பெரும் தலைவர் எம் .ஜி .ஆர்
ஈழத்திற்கு நிதி உதவி தந்து வளர்த்தவர்
ஈழத்தமிழரின் நெஞ்சம் நிறைந்தவர்
சிங்களக் கொடுமை உணர்ந்தவர்
சிங்களம் வீழ்ந்திட விரும்பியவர்
மதிய உணவை சத்துணவாக விரிவாக்கியவர்
மாணவர்கள் பள்ளி வரக் காரணமானவர்
கோடிகளைக் கொள்ளை அடிக்காதவர்
குடும்பத்திற்குச் சொத்துச் சேர்க்காதவர்
திரையில் மட்டுமே நடித்தவர்
நிஜத்தில் என்றுமே நடிக்காதவர்
விலைவாசியை கட்டுப்பாட்டில் வைத்தவர்
விவேகமாகச் சிந்தித்துச் செயல்படுத்தியவர்
அவரால் வாழ்ந்தவர்கள் கோடி
அவரால் வீழ்ந்தவர்கள் மிகச் சிலர்
உலகம் வியக்கும் வண்ணம் மதுரையில்
உலகத் தமிழ் மாநாட்டை நடத்தியவர்
உயிருள்ளவரை முதல்வராய் இருந்தவர்
உன்னத ஏழைகளின் இதயத்தில் வாழ்பவர்
https://play.google.com/store/apps/details?id=com.maaricare.eraeravi