மர்மம் விலகாத கோவில்கள் ? Part-3 குஜராத் கடல் கோவில் (Mysterious temple? Gujarat Sea Temple)
சிற்றூரில் அரபிக்கடலில் கட்டப்பட்ட ஸ்ரீ ஸ்தம்பேஸ்வரர் கோவில். இதற்கு தினமும் மறையும் கோவில் என்றும் பெயருண்டு. இப்படி ஒரு கோவில் இருப்பதே 150 ஆண்டுகளுக்கு முன்புதான் வெளியுலகிற்கு தெரிய வந்தது. 150 ஆண்டுகளுக்கு முன்பு கடல் உள்வோங்கும்போது தான் இக்கோவில் இருப்பது தெரியவந்தது. இந்தக் கோவிலின் அதிசயம் என்னவென்றால், காலை வேளைகளில் முழுமையாக காட்சியளிக்கும். பின்பு மாலை முதல் இரவு வரையிலும் கடல் அலைகளால் கோவில் முழுவதுமாக மூழ்கடிக்கப்படும். அந்த அளவுக்கு கணகச்சிதமாக இந்த கோவிலை கட்டி முடித்துள்ளனர். இதை கட்டியது யார், எந்த ஆண்டு என்பது இன்று வரையிலும் மர்மமாகவே உள்ளது.
குஜராத் மாநிலத்தில் கோலியாக் எனும் இடத்தில் கடலில் கட்டப்பட்டிருக்கிறது ஒரு சிவன் கோயில் நிஷ்களங்கேஷ்வரர் எனும் பெயர் தொண்ட இந்த சிவலிங்கத்தை வழிபட கடல் அலைகள் விலகி வழிவிடுகின்றன . குஜராத் மாநிலத்தில் பாவ்நகருக்கு அருகே உள்ளது கோலியாக் எனும் கடற்கரை கிராமம் . இதன் கடற்கரையிலிருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஒரு சிவாலயம். இது எல்லா நேரங்களிலும் கண்களுக்கு தெரிவதில்லை. ஒரு நாளைக்கு சரியாக 6 மணி நேரம் மட்டும் கடல் உள்வாங்கி இந்த சிவாலயம் வெளியே தெரியும் . இந்த கணக்கு தினமும் தவறாமல் அதே குறிப்பிட்ட நேரத்தில் நடந்து வருகிறது என்பது அதிசயமாள ஒன்று. பகல் ஒரு மணி யில் தொடங்கி இரவு 10 மணி வரை கடல் மெல்ல மெல்ல உள்வாங்கி ஜனங்கள் நடப்பதற்கு ஏற்றதாக மாறுகிறது . பிறகு மக்கள் இந்த நிலத்தில் இறங்கி நடந்து சென்று சிவனை வழிபடுகிறார்கள். பிறகு இரவில் நீர் மட்டம் உயர்ந்து மூடி விடுகிறது.
இந்த இடத்தில் அமாவாசை பெளர்ணமி நாட்களில் கடல் வழக்கத்தை விட அதிகமாக உள்வாங்கும் . ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் வழக்கமாக இருக்கு 6 மணி நேரத்திற்கு மேலாக உள்வாங்யபடி இருக்கும் . இந்தியாவில் உள்ள எந்த கடற்பரப்பிலும் இது போன்ற அதிசயம் நிகழ்வதில்லை . இந்த கோயில் அமைப்பு கோபுரம் இல்லாமல் வெட்ட வெளியில் இருக்கும். தண்ணீரில் மூழ்கியிருக்கும் நாட்களில் ஒரு தூண் மற்றும் கொடி ஆகியவை மட்டுமே தெரியும் . தண்ணீர் உள்வாங்கிய பிறகு உள்ளே சென்று பார்த்தால் ஐந்து லிங்கங்கள் இருப்பது தொயும் .
அரபிக் கடலில் இருக்கும் இந்த கோயில் பஞ்ச பாண்டவர்களால் நிறுவ பட்டது என்பது இன்னுமொரு ஆச்சர்ய தகவல் . மகாபாரத போரில் கெளரவர்களை கொன்று ஏற்பட்ட பிரம்மாஹத்தி தோஷத்தை நீக்குவதற்கு சிவனை வழிபட சரியான இடம் தேடி அலைந்தபோது கிருஷ்ணனின் வழிகாட்டுதல் படி இந்த இடத்திற்கு வந்து சிவனை பிரதிஷ்டை செய்து வழிபட்டார்கள். இவ்விடத்தில் கடற்கரையில் பாண்டவர்கள் தோண்டிய சுனை நீர் இன்னும் ஊற்றெடுக்கிறது . இந்த நீர் தித்திப்பு சுவையுடன் இருக்கிறது. நிஷ்களங்கேஷ்வர் என்ற இந்த சிவனுக்கு களங்கமற்றவர் என்று பொருள் .
மர்மம் விலகாத கோவில்கள் ? Part-3 குஜராத் கடல் கோவில் (Mysterious temple? Gujarat Sea Temple)