கவிதைகள்வாழ்வியல்

வெங்காயம்! கவிஞர் இரா. இரவி !

வெங்காயம்!

உரிக்க உரிக்க ஒன்றும் இல்லாதது தான்
உரித்துப் போடாவிட்டால் ஒன்றும் ருசி இருக்காது !

விலைவாசி உயர்ந்து விட்டால் ஏழைகள் எல்லாம்
வாடி விடுவார்கள் பேசும் பொருளாகி விடும் !

பகுத்தறிவுப் பகலவன் அடிக்கடி சொல்வார்
பெரியாரால் பிரபலமான சொல் வெங்காயம் !

மருத்துவ குணம் மிக்கது இந்த வெங்காயம்
மருத்துவரிடம் கொடுக்காமல் வணிகரிடமிருந்து வாங்குதல் ! 

சத்துக்கள் எல்லாம் நிறைந்திட்ட வெங்காயம்
சகலரும் விரும்பிடும் பொருள் வெங்காயம் !

வாழ்வின் தத்துவம் சுழியம் உணர்த்திடும்
வாழ்வதற்கு தேவையான உணவுப் பொருள் வெங்காயம் !

பெரியதை விட சிறியதற்கு மதிப்பு அதிகம்
பெரிதை விட சிறியதே விலை அதிகம் !

சாம்பாருக்கு நல்ல சுவை தருவது வெங்காயம்
சமையலறையில் பெரும்பங்கு வகிக்கும் வெங்காயம் !

சைவம் அசைவம் இரண்டுக்கும் தேவை வெங்காயம்
சின்ன வெங்காயம் இதயத்தை சீராக்கும் வெங்காயம்!  

நன்றி
கவிஞர் இரா.இரவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *