‘இரண்டாவது கோப்பை’ கவிஞர் இரா .இரவி !
இரண்டாவது கோப்பை எதிர்பார்ப்பது தவறு
எல்லோருக்கும் ஒரு கோப்பை என்பதே சரி !
தமிழகம் வந்தபோது காந்தியடிகளுக்கு
தாகம் தணிக்க இளநீர் வழங்கினார்கள் !
குடித்துவிட்டு சுவையாக உள்ளது என்றார்
காந்தியடிகளுக்கு மற்றொரு இளநீர் தந்தனர் !
காந்தியடிகள் வாங்க மறுத்து விட்டார்
காரணம் என்ன ? என்று கேட்டார் தந்தவர் !
மற்றுவருக்கான இளநீரை நான் குடிப்பது
முறையன்று நியாயம் அன்று என்றார் !
இயற்கையின் வளத்தை ஒருவரே
இனிதே அனுபவிப்பது தவறு என்றார் !
வள்ளுவர் வழியில் பகிர்ந்துண்டு வாழ
வழி சொன்னவர் நமது அண்ணல் !
ஒருவருக்கு ஒரு கோப்பை என்று முறையாக
ஒவ்வருவருக்கும் வழங்கிடும் வேளையில் !
ஒருவர் மற்றும் இரண்டாவது கோப்பை
ஒருபோதும் கேட்கக் கூடாது உணர்க !
நாகரிகம் அருந்துவதிலும் வேண்டும்
நாகரிகமன்று இரண்டாவது கோப்பை !
ஆர்வமாய் கேட்கும் இரண்டாவது கோப்பை
அடுத்தவருக்கானது என்பதை அறிந்திடுக !
யாரும் காணவில்லை என இரண்டாவது கோப்பை
யாசிப்பதை உங்கள் மனசாட்சி தடுக்க வேண்டும் !
ஒரு கோப்பை போதும் என்று திருப்தி கொள்க
ஒவ்வருவருக்கும் வேண்டும் நினைவில் கொள்க !
Warning: Attempt to read property "term_id" on bool in /home/u859506492/domains/tamildeepam.com/public_html/wp-content/themes/flex-mag/functions.php on line 982