உங்களைப் பற்றிய எண்ணம் எப்போதும்
உங்களிடம் உயர்வாகவே இருக்கட்டும் !
தாழ்வு மனப்பான்மை இருந்தால் உடன்
தகர்த்து எறிந்து தன்னம்பிக்கைப் பெறுங்கள் !
பலவீனம் எதுவும் இருந்தால் நீக்கிடுங்கள்
பலம் பெற முயற்சிகள் செய்யுங்கள் !
கெட்ட பழக்கம் ஏதேனும் இருந்தால்
கெட்ட கனவாக நினைத்து மறந்திடுங்கள் !
திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்
தன்னை நம்பும் வளமையைப் பெறுங்கள் !
உங்களை நீங்களே எடைப் போட்டுப் பாருங்கள்
உங்கள் எடை குறைவென்றால் உயர்த்துங்கள் !
முடியாது நடக்காது தெரியாது என்பதற்கு
முற்றுப்புள்ளி உடன் வைத்து முயலுங்கள் !
என்னால் முடியும் மற்றவரால் முடிவது
என்றே முயன்று சாதனை நிகழ்த்துங்கள் !
நன்றி
கவிஞர் இரா.இரவி
Warning: Attempt to read property "term_id" on bool in /home/u859506492/domains/tamildeepam.com/public_html/wp-content/themes/flex-mag/functions.php on line 982