சிவாஜி கணேசனுக்கு மரியாதை செய்த கூகுள்!
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93 வது பிறந்தநாளையொட்டி கூகுள் நிறுவனம் அதன் டூடுல் வழியாக அவருக்கு மரியாதை மற்றும் அஞ்சலி செலுத்துகிறது.
இன்றைய (அக்டோபர் 1 2021) கூகுள் டூடுலை, பெங்களூரைச் சேர்ந்த ஓவிய கலைஞர் நூபூர் ராஜேஷ் சோக்ஸியால் உருவாக்கப்பட்டுள்ளது. அது இந்தியாவின் “டாப் கிளாஸ்” நடிகர்களில் ஒருவரான நம்ம நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93 வது பிறந்தநாளைக் கொண்டாடும் நோக்கத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது
திரை உலகில், மாபெரும் உச்சங்களை தொட்ட நடிகர் சிவாஜி கணேசனின் 93 வது பிறந்தநாளில், அவருக்கு மரியாதை மற்றும் அஞ்சலி செலுத்தும் வண்ணம் உலகின் மாபெரும் தேடுபொறி தளமான கூகுள் தனது ஹோம் பேஜில் டூடுல் ஒன்றை உருவாக்கி உள்ளது