ஆன்மிகம்கதைகோவில்தெய்வீக குறிப்புகள்தெய்வீக பாடல்

ஸ்ரீ சாய் சத்சரிதம் (Sri Sai Satcharitam Chapter 1)

ஸ்ரீ சாய் சத்சரிதம் (Sri Sai Satcharitam Chapter 1)

அத்தியாயம் 1

நமஸ்காரங்கள் பாபா கோதுமை மாவு அரைத்து நிகழ்ச்சியும் அதன் தத்துவ உட்கருத்தும் புராதானமானது மிக்க மரியாதை உள்ளதுமான வழக்கத்தின் படி ஹேமத் பந்த் இந்த சாய் சரித்திரத்தை பல்வேறு நமஸ்காரங்களுடன் எழுத ஆரம்பிக்கிறார்.

1. முதலில் எல்லாவித இடையூறுகளை நீக்குதல் பொருளாகவும் தன் பணி வெற்றி உதவும் ஐந்து கரத்தனை ஞான முகத்தனை மிகப் பணிவுடன் தலை தாழ்த்தி வணங்குகிறோம் ஸ்ரீ சீரடி சாயி கணபதி என்றும் கூறுகிறார்.
2. பின்னர் தன் மனத்திலேயே உதித்த எண்ணங்களை உயர்த்தி உணர்வூட்ட தம் தாய் சரஸ்வதியை நமஸ்கரிக்கின்றார் ஸ்ரீ சாய் அறிவின் தெய்வமே என்றும் அவரை நம் வாழ்க்கை கீதத்தை அழகுடன் பாடுகிறார் என்றும் கூறுகிறார்.
3. ஆப்பிள் காத்தல் அளித்தல் என்னும் முற்றொழிலையும் முறையே நிகழ்த்தும் பிரம்மா விஷ்ணு சங்கரர் ஆகியோரையும் வணங்கி சாய்நாதர் அவர்களுடன் ஒன்றானவர் என்றும் சம்சாரம் என்னும் ஆற்றினை நாம் தாண்ட தம்மை சுமந்து செல்ல வல்ல மாபெரும் சத்குரு என்றும் விளம்பி,
4. பின்னர் பரசுராமரால் கடலில் நின்று உயர்த்தப்பட்ட கொங்கண தேசத்தில் அவதரித்து தம்மை காக்கும் தன் குலதெய்வமான நாராயணன் ஆதிநாத் மற்றும் குடும்பத்தின் ஆதிபுருஷரையும் நமஸ்கரித்து,
5. பின்னர் தமது கோத்திரத்தில் அவதரித்த பரத்வாஜ் முனிவரையும், பல்வேறு ரிஷிகளான யக்ஞவல்க்யர், பிருகு, பராசரர், நாரதர், வேதவியாசர், ஜனகர், ஜனந்தனர், ஜனத்குமாரர் சுகர், சௌனகர், விஸ்வாமித்ரர், வசிஷ்டர், வால்மீகி, வாமதேவர், னஜமினி,வைசம்பாயனர், நவயோகீந்திர் முதலியரையும் நவீன மஹான்களாகிய நிவ்ருத்தி, ஞானதேவர், சோபான், முக்தாபாய், ஜனார்த்தர், நாமதேவர், துகாராம், கனகர், நரஹரி முதலானோரையும் பணிந்து தலை வணங்கி,
6. பிறகு தனது தாத்தாவான சதாசிவரையும், தகப்பனாரான ரகுநாதரையும் தம் இளம் வயதில் மறைந்த அன்னை மற்றும் அவரை வளர்த்த அத்தை அன்பிற்குரிய அண்ணன் ஆகியோரையும் வணங்கி,
7. பின்னர் படிப்பவர்களை வணங்கி தமது பணிக்கு முழு அன்பையும், சிதையாத கவனத்தையும் கொடுத்தருள வேண்டிக்கொண்டு,
8. கடைசியாக தனது ஓரே அடைக்கலமும், பிரம்மமே மெய்ப்பொருள், பாரனைத்தும் மாயத்தோற்றம் என்று தனக்கு உணர்விக்கின்ற ஸ்ரீதத்தாத்ரேயரின் அவதாரமான சத்குரு ஸ்ரீ சாயிபாபா அவர்களை நமஸ்கரித்து, அங்ஙனமே எம்பெருமான் வதியும் எல்லா ஜீவராசிகளையும் வணங்கி துதிக்கின்றார்.
பராசரர், வியாசர், சண்டில்யர் முதலியோரது கருத்தின்படி ‘பக்தியால் பலகாலும்’ துதித்தவற்றை சுருக்கமாக கூறிய பின்பு ஆசிரியர் பின்வரும் நிகழ்ச்சியை விவரிக்கிறார்.

1910 ஆம் ஆண்டிற்குப்பின், எப்போதோ ஒரு நாள் நல்ல காலை நேரத்தில் மசூதிக்கு சாய்பாபாவைத் தரிசிப்பதற்காக சென்றிருந்தேன். பின்வரும் நிகழ்ச்சியை கண்ட நான் ஆச்சரியத்தால் தாக்கப்பட்டேன். தமது முகம், வாய் இவற்றை கழுவிய பின் சாய்பாபா கோதுமை மாவு அரைக்க தயார்படுவதில் முனைந்தார்.ஒரு சாக்கைத் தரையில் விரித்து அதன்மேல் திருகையை வைத்தார். பின்பு முறத்தில் கொஞ்சம் கோதுமையே எடுத்து தம் கஃப்னியின் கைகளை மடக்கிவிட்டுக்கொண்டு கையளவு கோதுமையை திருகைக் குழியில் இட்டார். திருகையைச் சுற்றி கோதுமையை அரைக்கத் தொடங்கினார். பிச்சை எடுத்து வாழ்ந்து, எவ்வித உடைமையும் சேமிப்பு அற்ற இவர் கோதுமை மாவு அறிக்கை வேண்டிய அவசியம் என்ன என்றவாறு நினைத்தேன். அங்கு வந்த சிலர் அவ்வாறு எண்ணினார்கள். ஆயின், ஒருவருக்கும் பாபா என்ன செய்கிறார் என்று கேட்க துணிவு வரவில்லை.

பாபா மாவரைக்கும் இச்செய்தி உடனே கிராமத்தில் பரவி ஆண்களும் பெண்களும் பாபாவின் செய்கையைக் காண பெருந்திரளாக மசூதிக்கு வந்தனர். கூட்டத்திலிருந்த தைரியம் உள்ள நான்கு பெண்மணிகள் வழியே நுழைந்து பாபா ஒருபுறம் ஒதுக்கிவிட்டு திருக்கையில் கைப்பிடிகளை பற்றி பாபாவின் லீலைகளை பாடியவாறு மாவரைக்கத் தொடங்கினர்.

முதலில் பாபா கடும் கோபம் அடைந்தார். ஆயின் அந்தப் பெண்மணிகளின் அன்பையும் பக்தியையும் கண்டு மிக்க சந்தோசம் அடைந்து புன்னகை புரியலானார். அவர்கள் அவ்வாறு அரைத்து கொண்டிருக்கையில் “பாபாவுக்கு வீடோ, பிள்ளைகளோ அன்றி அவரைக் கவனிக்க யாரும் இல்லையாதலாலும் அவர் பிச்சை எடுத்து வாழ்ந்தாராதலாலும் அவருக்கு ரொட்டி செய்ய கோதுமை மாவு தேவை இருக்க வில்லை. எனவே இவ்வளவு அதிகமான மாவை என்ன செய்வார்? ஒருவேளை பாபா அன்பாயிருக்கும் காரணத்தால், இம்மாவே தமக்கு பகிர்ந்து கொடுத்து விடுவார் “என்றவாறு எண்ணமிட்டபடி பாடியவாறே அரைத்து முடித்து, திருகையை ஓரத்தில் நகர்த்தி விட்டு கோதுமை மாவை நான்கு பிரிவாக பிரித்து ஆளுக்கு ஒவ்வொரு பகுதி எடுத்துக்கொள்ள தொடங்கினார்கள்.

இதுவரை அமைதியாகவும் அடக்கமாகவும் இருந்த பாபா கோவம் அடைந்து,
” பெண்களே உங்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா? யாருடைய அப்பன் வீட்டு பொருளை இவ்வாறு அபகரிக்கிறீர்கள். நீங்கள் தடங்கல இன்றி மாவை எடுத்துச் செல்வதற்கு நான் முன்னம் உங்களிடம் கடன் பட்டிருக்கிறேனோ என்ன? தயவுசெய்து இப்போது இதை செய்யுங்கள், இம்மாவை எடுத்துச் சென்று கிராம எல்லைகளில் கொட்டி விட்டு வாருங்கள்” என்றால். இதைக் கேட்ட பின் அவர்கள் வெட்கமடைந்து தமக்குள் ஏதோ முணுமுணுத்துக்கொண்டு கிராம எல்லைக்குச் சென்று பாபா கூறியபடி அங்கே மாவை பரப்பி விட்டார்கள்.

பாபா செய்த இவைகள் எல்லாம் என்னவென்று சீரடி மக்களை வினவினேன். காலரா நோய் கிராமத்தில் பரவிக் கொண்டு இருப்பதாயும் இது அதை எதிர்க்க பாபாவின் பரிகாரமாகும் என்றும் கூறினர். கோதுமை அரைக்கப்படவில்லை காலராவே அரைக்கப்பட்டு கிராமத்துக்கு வெளியில் கொட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியின் பின்னர் காலரா மறைந்த கிராம மக்கள் மகிழ்ச்சியினர். தானும் இவற்றை எல்லாம் அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் அதே சமயம் எனக்கு ஆச்சரியம் விளைந்தது. காலராவுக்கு கோதுமை மாவுக்கும் பூவுலகில் உள்ள ஒற்றுமையாது? சாதாரணமாக அவைகளுக்கு உள்ள உறவு என்ன? அவை இரண்டையும் எங்கனம் இணைக்க முடியும்? நிகழ்ச்சியை விவரிக்க இயலாததாய் இருக்கிறது. நான் இதைப் பற்றி சிறிது எழுது என் மனம் நிறைவடையும் வரை பாபாவின் இனிமையை இனிக்கும் லீலைகளை பாடுவேன்.

இந்த லீலைகளை பற்றி இவ்வாறாக எண்ணும் இட்ட பின் என் உள்ளம் மகிழ்ச்சியால் நிறைந்தது. இங்கனம் நான் பாபாவின் வாழ்க்கை வரலாறு ஆன சத்சரிதத்தை எழுத உணர்ச்சி ஊட்டப்பட்டேன்.

பாபாவின் அருளுடனும், ஆசியுடன் இப்பணி வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது என்பதையும் நாம் அறியேன்.

மாவரைத்ததன்‌ தத்துவ உட்கருத்து

சீரடி மக்களின் நிகழ்ச்சியை ஒட்டி அமைந்த காரணத்தை தவிர வேறு ஒரு தத்துவ உட்கருத்தும் இருப்பதாக நாம் நினைக்கிறோம். சாய்பாபா ஏறக்குறைய 60 ஆண்டுகள் சீரடியில் வாழ்ந்தவர். இந்நீண்ட காலத்தில் அவர் பெரும்பாலும் தினசரி அரைத்தார். கோதுமையை மாத்திரம் அன்று பாவங்கள், உள்ளம், உடல் ஆகியவற்றின் துன்பங்களையும் கணக்கில்லா தன்னாடியவர்களின் துயரங்களையும் அரைத்து தீர்த்தார்.

கர்மம் பக்தி என்ற இரண்டு கற்கள் அவர் திருக்கையில் இருந்தது. முன்னது கீழ் கல்லாகும். பின்னது மேற் கல்லாகும். பாபா பிடித்து அரைத்த கைப்பிடி ஞானம் ஆகும். சத்துவம், ராஜசம், தாமசம் என்ற முக்குணங்களை சேர்ந்த நமது எல்லா உணர்ச்சிகள், ஆசைகள், பாவங்கள், அகங்காரம் இவைகளை நிகளந்துகளாக்கி முன்னோடி முன்னோடி வேலையாக அரைக்கப்பட்டாலன்றி ‘ஞானம்’ அல்லது ‘தன்னை உணர்தல்’ என்பது முடியாது என்பது பாபாவின் உறுதியான தீர்ப்பாகும். இக்குணங்களை தள்ளி விடுவது அத்தகைய கடினமானது. ஏனெனில் அவைகள் அவ்வளவு நுட்பமானவை.

கபீரின் ஒரு நிகழ்ச்சியை இது ஞாபகம் மூட்டுகிறது. ஒரு பெண்மணி சோளத்தை அறுத்துக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு அவர் தன் குரு நிபத்னிரஞ்ஜனரிடம் “திருகையின் இடப்பட்ட சோளத்தைப் போன்று உலக வாழ்க்கை எனும் திருகையாலே நசுக்கப்படும்போது நான் அஞ்சுவதனால் அழுகிறேன்” என்று கூறினார் . நிபத்னிரஞ்ஜனர் “பயப்படாதே, நான் செய்வது போல் இத்திருகையில் உள்ள ஞானம் என்னும் பிடியைப் பிடித்துக் கொள். அதிலிருந்து நெடுந்தூரம் சென்று திரியாதே. ஆயின் உட்புறமாக திரும்பு அப்போது நீ காப்பாற்றப்படுவது நிச்சயம்” என்று பதில் அளித்தாராம்.

ஸ்ரீ சாய் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
ஓம் ஸ்ரீ சாய்ராம் ஓம் ஸ்ரீ சாய்ராம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *