Foods

பத்தாயிரம் மையில் பயணம்! வெ. இறையன்பு V. Irai Anbu (சாக்லேட் சுவடுகள்)

V. Irai Anbu (Tamil: வெ. இறையன்பு) is an IAS Officer, writer, educator, social activist and motivational speaker. He is the current Chief Secretary of Tamil Nadu Government .

பத்தாயிரம் மையில் பயணம்!

சிறுகதைகள் : சாக்லேட் சுவடுகள்

சாக்லேட் சுவடுகள் என்ற தலைப்பில் நம்ம இறையன்பு சார் அவர்கள் சாக்லேட் ஓட வரலாறு மிக எளிமையாகவும் ரொம்ப அழகாவும் சொல்லி இருக்காங்க. அதை நம்ம தமிழ் தீபத்துல பார்ப்போம் 😊😊😊Tamildeepam

சாக்லேட் சுவடுகள்

ஸ்பெயினில் சாக்லேட் பற்றிய விவரங்கள் நூறு ஆண்டுகளுக்கு மேலாக ரகசியமாக பாதுகாக்கப்பட்டது.

புதிய இடத்திற்கு பயணம் செய்யும்போது அங்கே காணும் பழக்க வழக்கங்கள் நம்முடையவற்றிலிருந்து வித்தியாசப்படுவதாலயே அவற்றை விமர்சனத்திற்கு உள்ளாக்கினால் நம்மால் எதையும் கற்றுக் கொள்ள முடியாது அடுத்தவர்கள் உணவையும் உடையும் மொழியையும் குறைக்காணும் கண்ணோட்டத்துடன் பார்த்தால் காலிக் குடமாகவே ஊர் திரும்புவோம். ஒவ்வொரு இடத்திலும் கற்றுக்கொள்ளும் செய்திகள் ஏராளம் இருக்கின்றன நாம் ஊரிலேயே நம் பார்த்தால் சில அரிய தகவல்கள் கண் நழுவிவிடுகின்றன. இன்று நாம் கடைக்குச் சென்று எளிதாக வாங்கி சுவைக்கின்ற சாக்லேட்டிற்கு எத்தனை ஆண்டுகள் பயணப்பட வேண்டியிருந்தது என்பது சுவாரசியமான வரலாறு.

நகைச்சுவை ஒன்று உண்டு. சாக்லேட்டுக்கு அடிமையாகிப் பற்கள் எல்லாம் சொத்தையான சிறுவனை பல் மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். பல்லை பரிசோதித்துவிட்டு குழி விழுந்த இடங்களை எதனால் நிரப்பலாம் என்று டாக்டர் யோசித்தபோது அந்த சிறுவன் யோசனை சொன்னான். “குழிகளைச் சாக்லேட் அடையுங்கள் டாக்டர்” என்று சாக்லேட் இல்லாத உலகத்தை குழந்தைகளால் நினைத்தே பார்க்க முடியாது.

தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் சிலர், 2007 நவம்பர் மாதம் ‘ஹோண்டுராஸ்’ என்கிற இடத்தில் தங்கள் ஆராய்ச்சியை மேற்கொள்ளும்போது, அங்கு கிமு 1400 காலகட்டத்தில் கொக்கோ பயிரிடப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தார்கள். அங்கு கிடைத்த பழங்காலப் பொருட்களை பார்க்கும் போது கொக்கோ பருப்புகள் மதுபானத்திற்காக பயன்படுத்தப்பட்டு இருக்கும் என்று ஊகப்படுத்தினார்கள்.

“வெல்லத்தினால் செய்த பலகாரங்கள் இரும்புச் சத்து அதிகப்படுத்துகின்றன. ஆனால் சாக்லேட் சாக்லெட்டோ அதிக கலோரி உள்ள உணவாக குண்டு குழந்தைகளை உண்டாக்குகிறது”

1400 இல் ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க பழங்குடியினான மாயா மக்களிடம் கொக்கோ பரத்தின் விதைகளை பயன்படுத்தும் வழக்கம் இருந்தது. சாக்லேட் என்னும் வார்த்தையை மாயா மொழியில் இருந்து தான் உருவானது. ஆனால் அந்த சொல்லிற்கு அவர்கள் மொழியில்‘ கசப்புத் தண்ணீர்’ என்று பொருள் இருந்தது. மத்திய அமெரிக்காவிலிருந்து, தென் அமெரிக்காவின் வடப்பகுதியில் குடியேறிய போது அவர்கள் கோகோ எஸ்டேட்டுக்களை நிறுவினார்கள். கொக்கோ பருப்பு மத வழிபாடுகளில் பயன்படுத்தப்பட்டது. அது‘கடவுளின் கொடை’ என்றும் அவர்களால் கருதப்பட்டது. பின்னர் அது ஆஸ்டெக் நகரத்திற்கும் பரவியது. ஆஸ்டெக் மன்னர் ‘மான்டெசூமா’அதை விரும்பி பருகுவார். தங்க குவளைகளில் அது பரிமாறப்படும் குடித்தவுடன் கோப்பை தூக்கி எறியப்படும் ஒரு நாளைக்கு அவர் 50 கோப்பைகளை குடிப்பாராம்.

1492 இல் அமெரிக்காவிலிருந்து திரும்பிய கொலம்பஸ், மன்னர் பெர்டினான்டிற்கும், இசபெல்லாடவிற்கும் தன் பயணத்தில் கிடைத்த நிறைய விசித்திரமான பொருட்களை பரிசாக வழங்கினார். ஆனால் அந்த பரிசுப் பொருட்கள் இருந்த கொக்கொ பீன்ஸ் களை யாரும் கண்டுகொள்ளவில்லை. 1513இல் ‘ஹர்னன்டோ-டா-ஓவிடோ’ என்பவர் தான் நூறு கொக்கொ பீனஸ்களுக்கு ஒரு அடிமையை விலைக்கு வாங்குவதாக குறிப்பு எழுதினார். ஆனால் அப்போது கூட ஐரோப்பாவிற்கு கொக்கோ கொண்டு வரப்படவில்லை.

1519 இல் ஹர்னன்டோ கார்ட்டஸ் என்பவர் மெக்சிகோவில் ஒரு பகுதியை கைப்பற்றினார். அங்கு கொக்கோ தோட்டத்தின் நிறுவினார். பிறகு அவர் ஸ்பெயினுக்கு திரும்பிய போது 1528 இல் மன்னர் ஐந்தாம் சார்லஸ்க்கு கொக்கோ பருப்புகளை தந்தார். இருக்கு சாக்லெட் பணம் தயாரிக்கும் விதத்தையும் கற்றுத் தந்தார். கசப்பாக இருந்த இந்த திரவத்தை சர்க்கரை கலந்து அருந்தினால் சுவையாக இருக்கும் என்று கார்ட்டஸ் தான் முதலில் அறிவுறுத்தினார். ஸ்பெயின் நாட்டினர் அதோடு வெண்ணிலா, கிராம்பு போன்றவற்றை கலந்து சுவையாக பணம் ஆக்கினர். அதனால் ஸ்பெயின் நாட்டின் கொக்கோ தோட்டத்தின் அதிக அளவில் உருவாகின. அதற்கு கிராக்கியும் இருந்தது. மெக்சிகோவில் ஒரு பகுதியில் தங்கி இருந்த ஸ்பெயின் நாட்டு மேட்டுக்குடி மக்கள் தங்கள் பணிப்பெண்கள் சூடான சாக்லெட் பணத்தை கொண்டு வர பணிந்தார். பிரார்த்தனை முடிந்ததும் அவர்கள் அருந்துவதற்கு அது தேவைப்பட்டது. தாங்கள் தூக்கி வந்து, தங்கள் மெல்லிய தேகம் பொலிவிழந்து விடுமோ என்று பயந்து, அவர்கள் பணிப்பெண்களை தூக்கி வரச் செய்ததை அங்கிருந்த உள்ளூர் பிஷப் கண்டித்து, அதற்கு தடை விதித்தார். ஆனால் விரைவிலேயே அவர் இருந்து கிடந்தார். அவருக்கு சூடான சாக்லெட்டில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஸ்பெயினில் சாக்லெட் பற்றிய விவரங்கள் 100 ஆண்டுகளுக்கு மேலாக ரகசியமாக பாதுகாக்கப்பட்டது. அதன் ஏகபோகமாக இருந்த கொக்கோ உற்பத்தியை உடைத்தது. இத்தாலிய பயணி ‘பிரான்சிஸ்கோ கார்டில்’ என்பவர் அவர் மத்திய அமெரிக்காவிற்கு சென்றபோது. அங்கு சாக்லெட் பானம் தயாரிக்கும் இடத்தை நேரில் கண்டறிந்து. இத்தாலியில் 1600 இல் சாக்லேட் உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்தினார். ஸ்பெயின் நாட்டிலிருந்து துறவிகள் மூலமாக அந்த ரகசியம் கசிந்தது உடனே ஐரோப்பாவில் அது பிரசித்திபெற்ற பானம் ஆனது.

இங்கிலாந்து நாட்டிற்கு கொக்கோவின் அருமை தெரியாமலேயே இருந்தது. 1579 இல் சில ஆங்கில கடற்கொள்ளையர்கள், கப்பல் முழுவதும் கொக்கோ பருப்புகளை ஏற்றி வந்த ஒரு ஸ்பெயின் நாட்டு கப்பலை இடமதித்தனர். கப்பலில் இருந்த பொருட்களை அடையாளம் காண முடியாமல் அதை ஆட்டுப்புழுக்கை என நினைத்து ஆத்திரத்தில் கப்பலை தீயிட்டுக் கொடுத்து விட்டனர்.

ஒரு கட்டத்தில் ஐரோப்பாவில் கொக்கு பருப்புகள் ரூபாய் நோட்டுகளாக பயன்படுத்தப்பட்டன. மூன்று பருப்புக்கு ஒரு முட்டையை வாங்கும் அளவு அதற்கு கிராக்கி ஏற்பட்டது. ஸ்பெயின் நாட்டு இளவரசி மரியா தெரசா, பிரெஞ்ச் இளவரசி 14ஆம் லூயியை திருமணம் செய்த போது நிச்சயதார்த்த பரிசாக சாக்லெட் வழங்கப்பட்டது. அப்போதே அது பாரிஸ் நாட்டில் புகழ்பெற்ற உணவாக முடி சுடிக் கொண்டது. 1657 இல் லண்டனில் பிரெஞ்சுக்காரர்கள் ஒருவரால் முதல் சாக்லெட் கடை திறக்கப்பட்டது. ‘மேற்கிந்திய பானம்’ என்று அதன் முகப்பில் எழுதப்பட்டது.

1677 இல் பிரேசில் நாட்டில் கொக்கோ தோட்டங்கள் உருவாகின. 1755 இல் தான் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் சாக்லேட் பரவியது. இயந்திரத்தால் சாக்லேட் செய்யும் பழக்கம் முதலில் ஸ்பைனில் தான் தோன்றியது. தன்னுடைய ‘ஆயுதங்களும் மனிதனும்’ என்கிற நாடகத்தில் பெர்னாட்ஷா போரிலிருந்து தப்பி ஓடுகிற ஒருவன் துப்பாக்கி ரவைகளுக்கு பதிலாக நிறைய சாக்லேட்களை எடுத்துச் செல்வதாக எழுதியிருப்பார். போரில் நிகழும் வன்முறைகளுக்கு எதிரான வாதமாய் அந்த நாடகம் அவரால் எழுதப்பட்டது. 1875 இல் பால் சாக்லேட் ஸ்விட்ச்லாந்து சார்ந்த டேனியல் பீட்டர் என்பவர் உருவாக்கப்பட்டது.

குறைந்த அளவை உட்கொள்ளும் போது ரத்த ஓட்டத்தை சாக்லேட் செம்மைப்படுத்துகிறது. மூளையை தூண்டுவதோடு வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்துகிறது. ஆனால் இன்று அதிக அளவில் உட்கொள்ளும் போது உடல் பருமனையும், ஊளைச் சதையையும் அதிகரிக்கச் செய்கிறது. பற்களில் தங்கும் தித்திப்பு சிதைவை ஏற்படுத்திவிடுகிறது. இதய நோயை அதிகரிக்கும் அபாயமும் சாக்லேட்டே உண்பதால் ஏற்படுகிறது. அதன் வித்தியாசமான சுவைக்காக குழந்தைகள் அடிமையாகி நம் பாரம்பரிய இனிப்பு பலகாரங்களான அதிரசம், கொழுக்கொட்டை, எள்ளுருண்டை, தேன்குழல், அப்பம் போன்றவற்றை விரும்புவதில்லை. இரும்பு சத்து அதிகப்படுத்துகின்றன ஆனால் சாக்லேட்டோ அதிக கேலரி உள்ள உணவாக குண்டு குழந்தைகளை உண்டாக்குகிறது.

நாய், குதிரை, கிளி, பூனை போன்ற பிராணிகள் சாக்லெட்டை உண்டால் அதிலிருக்கும் தியோபுரோமைனை செரிமானம் செய்ய முடியாமல் போய்விடுகிறது. 20 மணி நேரம் இரத்தத்திலேயே இருக்கும் இந்த ரசாயன பொருள் வலிப்பு, மாரடைப்பு, உள் ரத்துப் போக்கு ஆகியவற்றை ஏற்படுத்துவதால் அவை இறந்துவிடுகின்றன.

ஒரு நாய்க்கு அரைக்கிலோ சாக்லேட் கொடுத்தால் போதும் அது இறப்பது உறுதி.

Thanks to

வெ.இறையன்பு

👇👇👇👇👇👇👇

சிறுகதைகள் : கோப்பைகளில் பயணித்த தேனீர்

https://tamildeepam.com/tamil-deepam-aadhiya-kadhai-irai-anbu-tea-tamildeepam/

சிறுகதைகள் : காஃபியின் கதை

https://tamildeepam.com/tamil-deepam-kadhai-irai-anbu-travel-by-ten-thousand-the-story-of-coffee-tamildeepam/


Warning: Attempt to read property "term_id" on bool in /home/u859506492/domains/tamildeepam.com/public_html/wp-content/themes/flex-mag/functions.php on line 982
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment on gist

Most Popular

Tamil Deepam

started to provide the news updates in neutral view for the larger online community of users in Tamil Nadu,India and all over the World.

About Us

TamilDeepam.com was started to provide the news updates in neutral view for the larger online community of users in Tamil Nadu,India and all over the World. We identified this online opportunity used to give the awareness in all aspects to the tamil speaking people.

Copyright © 2021 TamilDeepam.com, powered by Wordpress.

To Top