வாழ்வியல்

பத்தாயிரம் மையில் பயணம்! வெ. இறையன்பு V. Irai Anbu

Irai Anbu tamil deepam

V. Irai Anbu (Tamil: வெ. இறையன்பு) is an IAS Officer, writer, educator, social activist and motivational speaker. He is the current Chief Secretary of Tamil Nadu Government .

பத்தாயிரம் மையில் பயணம்!

சிறுகதைகள் :

கோப்பைகளில் பயணித்த தேனீர்

pothetharmar tamil deepam

பயணங்களால் பரவிய பயிர்கள் இவை.
தேநீரைப் பொறுத்தவரை சுவையான புனையியல் கதையொன்று உண்டு. போதிதர்மர் சீனத்திற்கு சென்றபோது இடைவிடாமல் தியானம் செய்ய ஆரம்பித்தார். அப்போது தூக்கம் வந்து தன் தவத்தைக் கலைத்துவிடக் கூடாதே என்று இமைகளை கிள்ளி எறிந்தார். அந்த இமை செடியாக வளர்ந்தது என்றும், அதுவே தேயிலையாக மாறியது என்றும் ஐதீகம். அதனால்தான், தேநீரை அருந்தினால் தூக்கம் தள்ளிப் போகிறது என்று புத்தத்துறவிகள் நம்புகிறார்கள்.

tea pack tamil deepam

ஜென் பௌத்தத்தின் தேனீருக்குச் சிறப்பான இடமுண்டு. தேநீரைப் பருகுவது தியானமாகக் கருதப்படுகிறது. தோட்டத்தின் நடுவில், எட்டுக் கோணத்தில் அமைக்கப்பட்ட நீர் சூழ்ந்த குடிலுக்குச் சென்று, கைகளை சுத்தம் செய்து கொண்டு, அங்கு பரிமாறப்படும் தேனீரை விழிகளை மூடிக்கொண்டு, யாரிடமும் பேசாமல் ஒவ்வொரு துளியாக பருகும்போது நம்மீது தெய்வீகம் படர்கிறது என்பதை அவர்கள் விழிப்புணர்வை அதிகரித்துக் கொள்ளும் உபாயமாக பயன்படுத்திக் கொள்கின்றார்கள்.

tea helath tamil deepam

இன்னொரு அறிவியல்பூர்வமான விவரிப்பும் உண்டு. ஷென் நுங் என்கிற சீன அரசர் ஆணை ஒன்றை பிறப்பித்தார். தண்ணீரை காய்ச்சி தான் குடிக்க வேண்டும். அப்போதுதான் நோய் பரவாமல் இருக்கும் என்பது அவர் ஆணை. ஒருமுறை அவர் முகாம் செல்லும்போது அவர் குடிப்பதற்காக தோட்டத்தில் கொதிக்க வைக்கப்பட்ட நீரில், மேல் இருந்த செடியிலிருந்து இலை ஒன்று விழுந்து விட்டது. கவனக் குறைவுடன் அரசருக்கும் பரிமாறப்பட்ட அந்த நீர் அவருக்கு மிகவும் பிடித்துப் போனது. அதை அவர் உடலை வலுவாக்கி, மனத்தைத் திருப்திப்படுத்தி, நோக்கத்தை திடப்படுத்தும் பானம் என்று வருணித்தார். அப்போது எந்தச் செடியிலிருந்து அது விழுந்தது என்று கண்டுபிடித்து, அந்த தாவரத்தை அதிக அளவில் பயிரிட ஏற்பாடு செய்தார். அதுவே தேயிலை தோன்றக் காரணம்.

தேயிலை பற்றிய குறிப்பு கி. மு. 350ல் பதிப்பிக்கப்பட்ட ‘எர்யா’ என்ற சீனா அகராதியில் முதல் முறையாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. கி.பி ஆறாம் நூற்றாண்டில் சீனா முழுவதும் தேநீர் குடிக்கும் பழக்கம் ஏற்பட்டுவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமான தேநீர் கி. பி 8 நூற்றாண்டில் வரியும் விதிக்கப்பட்டது.

tea party tamil deepam

சீனத்திலிருந்து புத்தத் துறவிகள் மூலம் ஜப்பானுக்கு அது கொண்டு செல்லப்பட்டது. கிபி 729 ஆம் ஆண்டு ஜப்பானியப் பேரரசர் ஷோ-மு 100 புத்தத்துறவிகளை அழைத்துத் தேநீர் விருந்து கொடுத்தார்.

tea machine tamil deepam

ஐரோப்பியப் பயணிகள் கிழக்கு நோக்கி பயணித்த போது, சீனாவிலும் ஜப்பானிலும் தேநீர் தேசிய பானமாக மாறி இருப்பதை கண்டனர். அங்கிருந்து 1610 ஆம் ஆண்டு முதல் முதலாக தேயிலை மூட்டை ஹாலந்து நாட்டிற்குச் சென்று அங்கிருந்து அது இங்கிலாந்திற்குச் சென்று. கடல்வழிப் பயணத்தில் மற்ற ஐரோப்பிய நாடுகளைவிட இங்கிலாந்துக்கு அதிக நிபுணத்துவம் இருந்ததால் தொடர்ந்து பெரிய அளவில் சீனாவிலிருந்து தேயிலையை அவர்கள் கொண்டு செல்ல முடிந்தது. சீனத்தூதர் ஒருவர் ரஷ்யாவில் தேநீரை அறிமுகப்படுத்தினார். தேயிலை மட்டுமல்ல தேநீரைத் தயாரிக்கும் பாத்திரங்களையும் சீனாவிலிருந்தே தருவித்தார்கள்.

நியூயார்க்கில் இருந்து சீனத்திற்கு விரைவில் தேனீரை கொண்டுவர கப்பல் கட்டப்பட்டன. ‘வானவில்’ என்கிற கப்பல் பிரத்தியேகமாக இதற்காகவே செய்யப்பட்டது. அது நாளடைவில் கடல்வழிப் பயணத்தை விரைவாக்கும் வழிக்கும் வித்திட்டது. இங்கிலாந்து ‘மின்னல்’ என்கிற பெயரில் விரைவுக்கப்பல் ஒன்றை உருவாக்கியது.

tea machine tamil deepam 1

புதிய உலகம் என்று அறியப்படும் அமெரிக்க கண்டத்திற்கு பிரிட்டிஷ் மற்றும் டச்சு காலனியினர் தேனீரை அறிமுகப்படுத்தினார்கள். அதுவே அமெரிக்க விடுதலைக்கு ஆதாரமானது. எந்த தேநீரும் பரிமாறப்படாத விருந்தை “பாஸ்டன் தேநீர் விருந்து” என்று வரலாறு வாழ்த்துகிறது. இங்கிலாந்து பாராளுமன்றம் தேயிலை மீது கடுமையான வரி விதித்தது. அமெரிக்க குடியினர் செலுத்த மறுத்து, பெட்டி பெட்டியாக வந்த தேயிலையை மூன்று கப்பல்களில் இருந்து எடுத்து டிசம்பர்-6 1773 ஆம் ஆண்டு கடலில் தூக்கி எறிந்தார்கள். அது நடந்த இடம் பாஸ்டன் துறைமுகம். மற்ற இடங்களிலும் மக்கள் வரிக்கு எதிராக வரிந்து கட்டிக் கொண்டு கிளம்பினார்கள். அந்த எதிர்பபபே விடுதலை வேட்கையாகத் திரண்டது. வரிப்பணத்திற்கு ஆசைப்பட்டு, தன்கீழ் இருந்த நாட்டையே இங்கிலாந்து இழக்க நேரிட்டது.

tea garden tamil deepam

புதிய இடங்களில் தேயிலையைப் பயிரிடுவதற்கு எடுத்த நடவடிக்கைகளின் மூலமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் புதிய நாடுகளுக்குப் பயணப்பட்டார்கள். அப்படி இலங்கைக்கு பயணித்த தமிழர்கள் அதிகம். ஒரு பயிரில் ஏற்படுகிற சேதம் ஒரு தேசத்தின் பொருளாதாரத்தை மாற்றி விடக்கூடும். 1869 ஆம் ஆண்டு இலங்கையில் காப்பி பயிரில் ஏற்பட்ட கொள்ளைநோய், அவர்கள் தேயிலைக்கு மாறுகிற தேவையை ஏற்படுத்தியது. தமிழகத்திலிருந்து அங்கு சென்றவர்கள் பற்றிய வரலாற்றை நாம் அறிவோம்.

tea tamil deepam 3

ஆரம்பத்திலேயே தேயிலை புறக்கணிக்கப்பட்ட பயிராக இலங்கையில் இருந்தது. காபித் தோட்டங்களில் தற்செயலாக வளர்ந்த தேயிலைப் இப்பயிரை ஜேம்ஸ் டெய்லர் என்கிற ஸ்காட்லாந்துகாரர் “அசிங்கமான சின்னப் புதர் ” என்று வருணித்தார். அப்போது ஏற்பட்ட கொள்ளைநோய் காபித் தோட்டங்கள் முழுவதையும் சிதைத்துவிட்டது. ஆனால் அவற்றின் நடுவே முளைத்த தேயிலை மட்டும் தெம்பாய் இருந்தது. அதுவே அங்கு தேயிலைத் தோட்டங்களுக்கு வாயிலைத் திறந்தது.

சூயஸ் கால்வாய் தேயிலை ஏற்றுமதியில் முக்கியப் பங்கினை வகித்தது. அதற்குப்பிறகு ரயில் வண்டிகள் அதிக அளவில் தேயிலை போக்குவரத்தை ஊக்கப்படுத்தியது.

tea tamil deepam kadhai 1

சீனர்கள் கண்டுபிடித்தவற்றை ரகசியமாகவே வெகுநாட்கள் வைத்திருந்தார்கள். இந்தியாவிற்கு வந்த சீன யாத்திரிகர் இங்கிருந்து தகவலை அள்ளிச் சென்றார்களே தவிர, அங்கிருந்து தேயிலையை கிள்ளி வரவில்லை. பயணத்தின் போது தற்செயலாக இவை அறியப்பட்டன. புத்த பிக்குகள் அன்பையும் தியானத்தையும் உலகம் முழுவதும் பரப்ப முற்பட்ட போதுதான் தேநீர் உலக பானமாக உருவானது. தேனீர் பல் சிதைவை தடுக்கவும், வாய் துர்நாற்றத்தைப் போக்கவும் உறுதுணையாக உதவுகிறது. சீனர்கள் பால் கலக்காத தேநீர்க் கொப்பளித்தே பற்களை சுத்தம் செய்து விடுகிறார்கள். இதயத்தின் செயல்பாடு பச்சைத் தேயிலையால் சீராகிறது, வயிற்றுப்போக்கைத் தேநீர் கட்டுப்படுத்தும், அறுசுவைகளில் துவர்ப்பு ருசியைத் தேநீர்தான் இன்று வழங்குகிறது. மதுவைத் தவிர்க்க தேநீர் உதவியாக இருந்தது. மனத்தை மயக்கும் மதுவை தவிர்த்து தேனீநீ மட்டும் அருந்துபவர்களே “டிடோட்டலர்” என்று அழைக்கப்பட்டனர்.

நன்றி 
ஆதியா
Thanks to
வெ.இறையன்பு IAS 

👇👇👇👇👇👇👇
சிறுகதைகள் :  சாக்லேட் சுவடுகள்    
https://tamildeepam.com/tamil-deepam-kadhai-irai-anbu-travel-by-ten-thousand-chocolate-tamildeepam/

சிறுகதைகள் : காஃபியின் கதை

https://tamildeepam.com/tamil-deepam-kadhai-irai-anbu-travel-by-ten-thousand-the-story-of-coffee-tamildeepam/


Warning: Attempt to read property "term_id" on bool in /home/u859506492/domains/tamildeepam.com/public_html/wp-content/themes/flex-mag/functions.php on line 982
2 Comments

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment on gist

Most Popular

Tamil Deepam

started to provide the news updates in neutral view for the larger online community of users in Tamil Nadu,India and all over the World.

About Us

TamilDeepam.com was started to provide the news updates in neutral view for the larger online community of users in Tamil Nadu,India and all over the World. We identified this online opportunity used to give the awareness in all aspects to the tamil speaking people.

Copyright © 2021 TamilDeepam.com, powered by Wordpress.

To Top