குறும்பா ஹைக்கூ கவிஞர் இரா.இரவி.
குறும்பா ஹைக்கூ.
பொய் மட்டுமே மூலதனம்
அமோக வருமானம்
அரசியல்
தொட்டில் முதல் சுடுகாடு வரை
தொடரும் கொடிய நோய்
லஞ்சம்
வறுமை ஒழியவில்லை
வளங்கள் இருந்தும்
கருப்புப்பணம்
ஏழை மேலும்ஏழையானது போதும்
விரைவில் வேண்டும்
மாற்றம்
பிரதமரால் அன்று
கோடீஸ்வரர்களால் இன்று
மந்திரி பதவி
அளவு சுவை
இரண்டும் பெரிது
அவள் இதழ்கள்
இதழ்கள் பேசவில்லை
விழிகள் பேசின
மொழி பெயர்தது மனசு
ஏமாளிகள் உள்ளவரை
எமாற்றுவோருக்குப் பஞ்சமில்லை
சாமியார்கள்
திரும்புகின்றது
கற்காலம்
அரசியல்
அனைத்தும் அறிவோம் என்றவர்
அறியவில்லை கேமிரா
சாமியார்
உபதேசம்
பிரம்மச்சரியம்
சல்லாபத்துடன்
கோடிகள் குவிந்தும்
பட்டினியாகவே
கடவுள்
தங்கத்தின் ஆசை
விதிவிலக்கல்ல
கடவுள்களும்
வயது கூடக் கூட
அழகும் கூடியது
அவளுக்கு.
நன்றி கவிஞர் இரா.இரவி