ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
வீசியது யாரோ ?
வைரங்களை வானில்
நட்சத்திரங்கள் !
காட்சிப்பிழை
வளரவுமில்லை தேயவுமில்லை
நிலவு !
வாழ்நாளில்
வாழ்ந்த நாள்
எவ்வளவு ?
மீனவர்களின் கண்ணீரால்
உப்பானதோ ?
கடல் நீர் !
காத்திருந்தான் வலை விரித்து
வரவில்லை மீன்கள்
வந்தான் சிங்களன் !
அரசுகளைப் போலவே
மக்களிடம்
நிதிநிலை பற்றாக்குறை !
திருடியது யாரோ ?
நிலவை
அமாவாசை !
இடிந்து விழுந்தது வீடு
மணல் கொள்ளையன்
தலையில் !
பலநாளில் கட்டியது
சிலநிமிடங்களில் அழித்தான்
தேன் கூடு !
பயன்படாது சோற்றுக்கு
எரிமலை கக்கும்
குழம்பு !
பயன்படுத்துவதில்லை
சிறகிருந்தும்
மட வாத்து !
ஒற்றைக்கால் தவம்
வரமாக மீன்
கொக்கு !
பட்டுப் பூச்சிகளின்
சோகம் சொல்லியது
பட்டுச்சேலை !
புழுவின் மீதான ஆசை
போனது உயிர்
மீனுக்கு !
உணவில் நவீனம்
கேடு தரும்
உடல் நலத்திற்கு !
அறம் என்றால்
என்ன ? என்றார்
அரசியல்வாதி !
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
நன்றி கவிஞர் இரா.இரவி