கோட்டோவியம்
பார்க்க எளிமையாகத் தான் இருக்கும்
பார்ப்பவர் உள்ளத்தில் வலிமையாகப் பதியும்!
அரசியல் நையாண்டிக்கு உதவும்
அழகை உணர்த்தவும் உதவும் !
ஓவியரின் உள்ளத்து உணர்வை உணர்த்தும்
ஓவியம் கண்டோரின் உள்ளம் பறிக்கும் !
திட்டமிட்டு கோடுகளை இணைத்து
தீட்டுகின்றனர் அற்பு ஓவியம்!
பத்து பக்க கட்டுரையின் செய்திகளை
படம் ஒன்று உணர்த்தி விடும்!
கோட்டோவியம் வரைந்து கைதானவர்கள் உண்டு
கோட்டோவியம் வரைந்து பரிசும் பெற்றவருண்டு!
பார்த்தால் பரவசம் பலவற்றை உணர்த்தும்
படம் மனத்தில் நன்கு பதிந்திடும்!
யானை வரைந்து காட்டினால் குழந்தைகள்
யாவருக்கும் மிகவும் பிடிக்கும்!
ஒரு பென்சில் கொண்டு வரைந்தாலும்
பல ஓவியங்கள் தீட்டிட முடியும்!
கோட்டோவியம் பலருக்கு வாழ்வளித்துள்ளது
களிப்புடன் வரைந்து வாழ்கின்றனர்!
கணினி வருகைக்குப் பின்னே
கையால் வரையும் ஓவியருக்கு மதிப்பில்லை!
ஓவியம் என்பது உன்னதக்கலை
சித்திரம் என்பது கைபழக்கம் என்றனர்!
சாலையில் வரைவதும் கோட்டோவியம் தான்
சாலை கடக்கும் சிலர் தான் கவனிக்கின்றனர்!
கடவுள் படம் வரைந்தும் ஓவியன்
கஞ்சிக்கு கஷ்டப்படும் நிலை தான் இன்று!
நன்றி கவிஞர் இரா.இரவி

Warning: Attempt to read property "term_id" on bool in /home/u859506492/domains/tamildeepam.com/public_html/wp-content/themes/flex-mag/functions.php on line 982