கவிதைகள்வாழ்வியல்

குறும்பா ஹைக்கூ கவிஞர் இரா .இரவி !

குறும்பா ஹைக்கூ

பெற்ற பிள்ளை மட்டுமல்ல
தத்துப் பிள்ளையும் தரும்
கண்ணீர் !

மாதா பிதா குரு
மூன்றிலும் மேலானவன்
நல்ல நண்பன் !

ஆற்றலின் புதையல்கள்
அறிவின் விதைகள்
இளைஞர்கள் !

எண்ணம் உயர்ந்தால்
செயல் சிறக்கும்
வாழ்க்கை இனிக்கும் !

தூர விலகும் துன்பம்
நெருங்கி வரும் இன்பம்
வேண்டும் தன்னம்பிக்கை !

முற்போக்குவாதி
இரத்தத்திலும் கலந்துள்ளது
ஆணாதிக்கம் !

எதிர்ப்பார்ப்பது போலவே
கொடுக்க வேண்டும்
மரியாதை !

நடப்பட்ட நாற்று
நோகாமல் காத்திடு
மனைவி !

பணத்தால் மதிப்பது விடுத்து
குணத்தால் மதித்தால்
நலம்பெறும் நாடு !

உழைக்காத இரும்பு
துருப்பிடிக்கும்
மனிதன் ?

பிறர் தருவதல்ல நீயே தருவது
உன்னுள் உள்ளது
மகிழ்ச்சி !
.
நிம்மதியின்
பகைவன்
மதியின் பேராசை !

முடியாது என்று
நினைக்கும் போதே
தொடங்கிடும் தோல்வி !

அழிவிற்கான
காரணி
ஆணவம் !

நடிகரை நேசிப்பது அப்புறம்
முதலில் நேசி
உன்னை !

முன்னேற வழி வகுக்கும்
சிக்கல் தீர்க்கும்
முதியோர் உரை !

ஆண்களே
அன்னமாக இருங்கள்
மனைவி சொல் கேட்பதில்

நன்றி 
கவிஞர் இரா.இரவி 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *