மகளிர் ! கவிஞர் இரா .இரவி !
ஓவ்வொரு ஆணின் வெற்றிக்கு பெண் பின் நின்றது போதும்
ஓவ்வொருப் பெண்ணும் வெற்றிப் பெற வேண்டும்
தடைகளை உடன் தகர்த்திட வேண்டும்
தன்னம்பிக்கையை மனதில் வளர்த்திட வேண்டும்
மூடநம்பிகைகளை முற்றாக ஒழித்திட வேண்டும்
மூளையைப் பகுத்தறிவிற்குப் பயன்படுத்திட வேண்டும்
மானே தேனே என்றால் கவனமாக இருந்திட வேண்டும்
மனது லட்சியம் நோக்கிப் பயணித்திட வேண்டும்
சமையல் அறையில் இருந்து முதலில் விடுபட வேண்டும்
சமயங்களின் மூடப் பழக்கங்களை மாற்றிட வேண்டும்
போகப் பொருள் அல்ல பெண்கள் உணர்த்திட வேண்டும்
பாகத்தில் சரிசமமாகப் பங்குப் பெற்றிட வேண்டும்
பெண்ணாகப் பிறந்ததற்குப் பெருமைப் பட வேண்டும்
பெண் இன்றி உலகம் இல்லை விளக்கிட வேண்டும்
எதையும் சாதிக்கும் இதயம் பெற்றிட வேண்டும்
எதற்கும் அஞ்சாத துணிவினைப் பெற்றிட வேண்டும்
பெண்கள் ஆற்றலின் இமயம் தெரிந்திட வேண்டும்
பெண்கள் திறமையின் ஊற்றுப் புரிந்திட வேண்டும்
பெண்கள் சிந்தனையின் சிகரம் தெரிந்திட வேண்டும்
பெண்கள் செயலின் வடிவம் புரிந்திட வேண்டும்
ஆண் பெண் பேதம் உடன் அகற்றிட வேண்டும்
ஆண் பெண் சமத்துவம் நடைமுறைப் படுத்திட வேண்டும்
பெண்கள் இட ஒதுக்கீடு உடனே சட்டம் ஆகிட வேண்டும்
தாமதித்தால் பெண்கள் வாக்களிக்க முடியாது அறிவித்திட வேண்டும்
நன்றி கவிஞர் இரா.இரவி