இணையர்கள் பலர் வந்து அமர்ந்து
இனிமையாகப் பேசி மகிழ்கின்றனர்!
ஊடலை உடைத்து சில இணையர்
கூடலுக்கு முன்னுரை எழதுகின்றனர்!
வயிற்றுப்பிழைப்பிற்கு பலர்
வருவோரிடம் சுண்டல் விற்கின்றனர்!
அலைகளும் ஓய்வின்றி சலிக்காமல்
அன்பை கரைக்கு சொல்கின்றன!
குளிக்கச் செல்வதாகச் சென்று
கடலுக்குள் மூழ்கி இறக்கின்றனர்!
சிலர் தற்கொலைக்கும் முயல்கின்றனர்
சிலர் மட்டுமே அழகை ரசிக்கின்றனர்!
நன்றி கவிஞர் இரா.இரவி

Warning: Attempt to read property "term_id" on bool in /home/u859506492/domains/tamildeepam.com/public_html/wp-content/themes/flex-mag/functions.php on line 982