கவிதைகள்வாழ்வியல்

உழைப்பாளர் தினம் ! கவிஞர் இரா .இரவி

வருடத்தில் ஒரு நாளாவது உழைக்கும் உழைப்பாளிகளை
உலகம் நினைத்துப் பார்ப்பதற்கு நன்றி !

தினம் தினம் உழைக்கும் உழைப்பாளிகளை
உழைப்பாளர் தினத்திலாவது நினைத்து மகிழ்வோம் !

உலகம் உருவானதும் உயர்வானதும்
உழைப்பாளிகளின் ஒப்பற்ற உயர்ந்த உழைப்பால் !

பாலங்கள் கட்டியதும் அணைகள் கட்டியதும்
வாகனங்கள் செய்ததும் சாலைகள் போட்டதும்

உழைப்பாளிகள் ! உழைப்பாளிகள் ! உழைப்பாளிகள் !
உழைப்பாளிகள் உழைப்பு மதிக்கப் பட வேண்டும் !

உண்ண உணவு வழங்கியவர்கள் உழைப்பாளிகள் !
உடுக்க உடை உருவாக்கியவர்கள் உழைப்பாளிகள் !

வசிக்க வீடு கட்டியவர்கள் உழைப்பாளிகள் !
வளமான வாழ்விற்குக் காரணம் உழைப்பாளிகள் !

உழைப்பாளிகள் இல்லை என்றால் நீயும் இல்லை நானும் இல்லை
உழைப்பாளிகள் இல்லை என்றால் ஊரும் இல்லை உறவும் இல்லை !

உழைப்பாளிகள் இல்லை என்றால் உலகம் இல்லை
உழைப்பாளிகள் இல்லை என்றால் வாழ்க்கை இல்லை !

உடலின் வியர்வை நிலத்தில் சிந்தி
உலகின் உயர்வை உருவாக்கிய சிற்பிகள் !

ஓய்வை ஒத்தி வைத்து விட்டு நாளும்
உழைப்பை ஓய்வின்றி நல்கியவர்கள் !

உழைப்பாளிகள் வாழ்க்கையில் உயரவில்லை
உழைக்காதவன் வாழ்க்கையில் உயர்ந்து விடுகின்றான் !

உடல் உழைப்பு மட்டம் என்பது மடமை
மூளை உழைப்பு மட்டுமே உயர்வு என்பதும் மடமை !

உழைப்பாளிகள் உள்ளம் மகிழ்ந்து இருக்க வேண்டும்
உள்ளதை உழைப்பாளிகளுக்கு பகிர்ந்திட வேண்டும் !

உழைப்பாளிகள் மதிக்கப் பட வேண்டும்
உழைப்பினை உலகம் போற்றிட வேண்டும் !

உழைப்பாளர் தினம் ! கவிஞர் இரா .இரவி !

தினம் தினம் உழைப்பவன் உழைப்பாளி !
தித்திக்கும் உலகை உருவாக்கியவன் உழைப்பாளி !

தினங்கள் பல் வந்தாலும் எல்லாவற்றிலும்
உன்னத தினம் உழைப்பாளர் தினம் !

வியர்வையை மதிக்கும் விவேக்மான தினம் !
உழைப்பைப் போற்றும் ஒப்பற்ற தினம் !

ஆண்டு முழுவதும் தினங்கள் வந்தாலும்
ஆண்டாண்டாக மதிக்கும் தினம் உழைப்பாளர் தினம் !

இவ்வுலகின் வளர்ச்சி உழைப்பாளியின் முயற்சி!
இப்பூவுலகின் மலர்ச்சி உழைப்பாளியின் முயற்சி!

உலகில் உழைப்பவன் மட்டுமே மனிதன் !
உலகில் உழைக்காதவன் மனிதன் அன்று !

உழைக்காமல் உண்பவன் திருடன் என்று அன்றே !
உரைத்தார் உயர்ந்த தேசப்பிதா காந்தியடிகள் !

மரத்திற்கு அழகு பூக்கள் பூப்பது !
மனிதனுக்கு அழகு உழைத்து வாழ்வது !

உலகில் மேன்மையானது உடல் உழைப்பு !
உலகில் மென்மையானது மூளை உழைப்பு !

உடையில் இருக்கும் ! உள்ளத்தில் இருக்காது கறை !
உடல் நிறம் கருப்பு உள்ளமோ வெள்ளை !

கள்ளம் கபடம் அறியாதவர்கள் உழைப்பாளிகள் !
கற்கா விட்டாலும் பண்பாளர்கள் உழைப்பாளிகள் !

பிறந்ததன் பயன் உழைப்பில் உள்ளது !
பிறந்தோம் இறந்தோம் என்பதில் என்ன உள்ளது!

உண்ண உணவு தந்தவன் உழைப்பாளி !
உடுக்க உடை தந்தவன் உழைப்பாளி !

வசிக்க வீடு தந்தவன் உழைப்பாளி !
ரசிக்க மலர் தந்தவன் உழைப்பாளி !

மண்ணை சிலையாக்கியவன் உழைப்பாளி !
பொன்னை சிலையாக்கியவன் உழைப்பாளி !

கல்லை சிலையாக்கியவன் உழைப்பாளி !
மரத்தை சிலையாக்கியவன் உழைப்பாளி !

வண்ணத்தை ஓவியம் ஆக்கியவன் உழைப்பாளி !
எண்ணத்தை விதையாக்கிவன் உழைப்பாளி !

உழைப்பாளி இன்றி உலகம் இல்லை !
உழைப்பாளி இன்றி உயர்வு இல்லை !

உழைப்பாளி இன்றி வாழ்க்கை இல்லை !
உழைப்பாளி இன்றி வசந்தம் இல்லை !

வெயில் மழை பாராது உழைப்பவன் !
வெந்தசோற்றைத் தின்று வாழ்பவன் !

தொழுவதை விடச் சிறந்தது உழைப்பு !
பூசாரியை விடச் சிறந்தவன் உழைப்பாளி !

வியர்வை காயும் முன் கூலியைக் கொடு !
வேதனை வராமல் உழைப்பாளியை காத்திடு !

வியாபாரியிடம் பேரம் பேசினால் தவறு அன்று !
உழைப்பாளியிடம் பேரம் பேசினால் தவறு !

போற்றுவோம் !. உழைப்பைப் போற்றுவோம் !
போற்றுவோம் ! உழைப்பாளிகளைப் போற்றுவோம் !


மற்ற கவிதைகள்

வீரபாண்டிய கட்டபொம்மன்! கவிஞர் இரா. இரவி

இலக்கிய இமயம் மு .வரதராசனார் கவிஞர் இரா .இரவி

பாவேந்தர் ! கவிஞர் இரா .இரவி !

வறுமை கொடிது ! கவிஞர் இரா .இரவி

மாமதுரை போற்றுவோம் ! மாமதுரை போற்றுவோம் ! கவிஞர் இரா .இரவி !

இலக்கிய இமயம் ஜெயகாந்தன்! நினைவு நாள் ! கவிஞர் இரா .இரவி !

சூரிய தாகம் ! கவிஞர் இரா .இரவி !

கோடை மழை ! கவிஞர் இரா .இரவி !

சும்மா இருக்கவில்லை நாங்கள் ! கவிஞர் இரா .இரவி !

உலக இட்லி தினம். இட்லிக்கு இணை வேறு இல்லையே ! கவிஞர் இரா .இரவி

நன்றி
கவிஞர் இரா.இரவி 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *