இராமேஸ்வரம்
ராமேஸ்வரம் என்ற புனித நாமம் இராமச்சந்திர மூர்த்தியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஈசன் எழுந்தருளி உள்ள புனிதத்தலம் என்பதே இயல்பாகவே குறிக்கின்றது. மூலஸ்தான மூர்த்தியை ராமேசுவரர் ,ராமலிங்கம், ராமநாதன், என்ற பலவாறாக அழைக்கப்படுகிறது.

இராமேசுவரத்தில் வழிபாடு மஹோததியும் (வங்காள விரிகுடா) ரத்தினகரமும் (இந்துமாக்கடல் ) கூடும் இடமான தனுஷ்கோடியில்( சேது) முழுக்கும் செய்தால் தான் காசி யாத்திரை பூர்த்தியாகும் . சேது என்ற வடமொழிச் சொல்லுக்கு பாலம் என்பது பொருள் இராமபிரான் இலங்கையை அடைவதற்காக கட்டிய அணையையே இது குறிக்கிறது. இராவணன் தம்பியும், இராமனின் நண்பனுமான விபீஷணனின் வேண்டு கோளுக் வேண்டுகோளுக்கிணங்க ராமன் சேது அணையிணை வில் நுனியால் உடைத்ததால் தனுஷ்கோடி என்ற பெயர் ஏற்பட்டது (தனுஷ் – வில் ,கோடி – முனை )ராமன் தன் வில் முனையால் சேதுவுக்கு இடம் காட்டியமையால் இப்பெயர் உண்டாயிற்று எனவும் கூறுவர் . ராமேஸ்வரம் கோயில் வழிபாட்டிற்கு முன்னும் பின்னும் சேது தீர்த்தத்தில் நீராடுவது ஐதீகம்.
இராவண சம்ஹாரம் முடிந்ததும் மகரிஷிகளின் கருத்துப்படி ராவணனை கொன்ற பிரமஹத்திதோஷம் நீங்குவதற்காக ராமன் ,சீதை ,இலட்சுமணும் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். என்று புராணங்கள் கூறுகின்றன பிரதிஷ்டை செய்வதற்கு நல்ல வேலை குறித்து கைலாசத்தில் இருந்து லிங்கம் கொண்டு வரும்படியாக ராமன் அனுமனை அனுப்பியதாகவும் நெடுந்தொலைவில் உள்ள கைலாசத்தில் இருந்து அனுமன் லிங்கம் கொண்டுவருவதற்கு காலம் தாழ்ந்ததால் சீதை மணலால் செய்த லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டனர் என்றும் சொல்லப்படுகிறது . திரும்பி வந்த அனுமன் கோபம் கொண்டு மணலால் செய்யப்பட்ட லிங்கத்தை அகற்ற முயன்றும் இயலவில்லை . அனுமனை ஆறுதல் சொய்வதற்காக ராமலிங்கத்தின் பக்கத்தில் அனுமன் கொண்டு வந்த விசுவலிங்கத்தை ஸ்தாபித்து ,அதற்கு பூஜை முதலியன முதலில் செய்ய வேண்டும் என்று ராமன் ஆணையிட்டார் .
இந்தியாவில் உள்ள இந்து ஆலயங்களில் வடக்கே பத்ரிநாதர் மற்றும் கிழக்கு பூரி ஜெகன்நாதர் மேற்கே துவாரகம் தெற்கே ராமநாதர் (ராமேஸ்வரம் )ஆகியவை புகழ்பெற்றன. இவைகளில் ராமநாதன் ஒன்றே சிவத்தலம் மற்றும் மூன்றும் வைணவத் தலங்கள் ராமபிரான் (வைணவர்) ஈஸ்வரனை சிவலிங்க வடிவில் (சைவத்தை) பிரதிஷ்டை செய்தார் என்பது ஆளும் சைவ மதத்தினரும், .வைணவ மதத்தினரும் வந்து கூடி வழிபடுவதாலும் இந்தியாவில் உள்ள இந்து ஆலயங்களில் உள்ள ராமேஸ்வரம் மிகவும் முக்கிய இடம் பெறுகிறது.
இந்தியாவில் உள்ள பன்னிரண்டு ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் ஒன்று அருள்மிகு இராமலிங்கம் அமைத்த ராமேஸ்வரம், மற்றவை.

சௌராஷ்டிரத்தில் சோமநாதேஸ்வரர் ஸ்ரீ சைலத்தில் ஸ்ரீ மல்லிகார்ஜுனர் உஜ்ஜயினியில் ஸ்ரீ மகாகாளேஸ்வரர் அமலேஸ்வரத்தில் ஸ்ரீ ஓம் காரேஷ்வரர் பரலியில் ஸ்ரீ நாகேஸ்வரர் வாரணாசியில் ஸ்ரீ காசி விஸ்வநாதர் நாசிக்கில் ஸ்ரீ திரியம்பகேஸ்வரர் ஹிமாலயத்தில் ஸ்ரீ கேதாரேஸ்வரர் எல்லோராவின் ஸ்ரீ குஸ்ருநேஸ்வரர் பீமாநதிக்கரையில் ஸ்ரீ பீமாசங்கரர் ஜஸ்ஸிடியில் ஸ்ரீ வைத்தியநாதர்
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையும் வங்காளம் முதல் பம்பாய் வரையும்அதற்கு அப்பாலும் பரந்து விரிந்துள்ள பாரத தேசத்தின் தேசிய ஒருமைப்பாட்டினையும் ஐக்கியத்தையும் வளர்க்கக் கூடிய இடமாக இப்புனித தலம் விளங்கி வருகின்றது



























