சமூகம்செய்திகள்டிரெண்டிங்நம்மஊர்

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு: இனி யூனிட்டுக்கு எவ்வளவு செலுத்த வேண்டும்? Power tariff hike: How much to pay per unit ?

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 100 யூனிட் வரை கட்டணத்தில் மாற்றமில்லை, 200 யூனிட்க்கு மேல் பயன்படுத்துவோருக்கு கட்டணம் உயர்கிறது. நுகர்வோர்களே 100 யூனிட் இலவச மின்சாரத்தை வேண்டாம் என்று எழுதிக் கொடுக்கும் திட்டம் அறிமுகமாகிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

அதன்படி இனி யூனிட்டுக்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை காணலாம்..

  • முதல் 100 யூனிட் இலவசம்
  • 101 – 200 யூனிட்களுக்கு, ஒரு யூனிட்டுக்கு 2 ரூபாய் கட்டணம். இதன்படி 200 ரூபாய் வசூலிக்கப்படும்.
  • 201 – 500 யூனிட்களுக்கு கட்டணம் 3 ரூபாயாகும்.
  • இந்த வகையில் வாடிக்கையாளர் பயன்படுத்தியிருப்பு 400 யூனிட் என்பதால் 201 – 400 யூனிட்களுக்கு கணக்கிட்டால் 600 ரூபாய் செலுத்த வேண்டும். இதில் மொத்த நிலையான கட்டணம் என்பது 30 ரூபாயாகும். ஆக மொத்தத்தில் நீங்கள் செலுத்த வேண்டிய தொகை 30+ 200+600 = 830 ரூபாயாகும்.
  • 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் முதல் 100 யுனிட்டுகள் இலவசம்.
  • அதற்கு மேல் 101 – 200 யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட்டின் விலை 3.50 ரூபாயாகும்.
  • அப்படிப் பார்த்தால் 101-200 யூனிட்டுகளுக்கு 350 ரூபாயாக கணக்கில் கொள்ளப்படும்
  • இதே 201 – 500 யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட்டின் விலை 4.60 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அந்த வீதத்தில் 300 யூனிட்களுக்கு 1,380 ரூபாய் வசூலிக்கப்படும்.
  • இதே 500 – 520 யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட்டின் விலை 6.60 ரூபாயாகும். இந்த வீதத்தில் கணக்கிடும்போது 132 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.
  • இதனுடன் நிலையான கட்டணம் 50 ரூபாய் மொத்தம் ரூ.50 + 350+ 1380+ 132 = 1,912 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *