டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு…! 7,306 பணியிடங்களுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பம்
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நேற்றுடன் கால அவகாசம் முடிந்த நிலையில், 21 லட்சம் பேர் விண்ணப்பித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 7,306 காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளன. ஒரு பணியிடத்துக்கு சுமார் 300 பேர் போட்டியிடுகின்றனர்.
தமிழ்நாடு அமைச்சுப் பணி, தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணி, தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணி, தமிழ்நாடு சட்டமன்ற பேரவைச் செயலகப் பணி, தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் தொழில்நுட்ப சார்நிலைப் பணி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய சார் நிலைப் பணிகளில் உள்ள 7301 காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன.
21 லட்சம் பேர் விண்ணப்பம் இந்த பணிகளுக்கு கல்வித்தகுதி 10ஆம் வகுப்பு என்று இருப்பதால், முதல் ஒரு வாரத்திலேயே சுமார் 7 லட்சம் பேர் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்ததாக தகவல் வெளியாகின. கடந்த 24ஆம்தேதி நிலவரப்படி, இந்த பணியிடங்களுக்கு 13 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். நேற்றிரவு வரையிலான தகவலின்படி மொத்தம் 21,11,357 பேர் இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 1 இடத்திற்கு 300 பேர் போட்டி விண்ணப்ப பதிவு செய்தவர்களின் புள்ளிவிவரங்களுடன் காலிப்பணியிடங்களுக்கான எண்ணிக்கையை ஒப்பிட்டு பார்க்கும்போது ஒரு பணியிடத்துக்கு கிட்டத்தட்ட 300 பேர் போட்டியிடுகின்றனர். விண்ணப்பப்பதிவு முடிந்துள்ள நிலையில், இந்த பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு ஜூலை மாதம் 24ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது.