குடும்ப உறவுகள் மேம்பட வேதாத்திரி மகரிஷி கூறும் வழிகள்
1️⃣ குடும்பத்தினர் அனைவரும் தினமும் ஒரு வேளையாவது சேர்ந்து அமர்ந்து உண்ண வேண்டும். சேர்ந்து உண்ணும் குடும்பங்கள், நீண்டகாலம் அன்பால் பிணைந்திருக்கின்றன என்று கண்டுபிடித்துள்ளனர். ஒவ்வொருவருடைய சுவைக்கும் உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் அளிப்பதாலும், ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வதாலும் அன்பும் பிணைப்பும் உருவாகிறது.
2️⃣ குடும்பத்துடன் வாரம் ஒரு முறையாவது வெளியில் சென்று வரவேண்டும். பூங்கா, மலைப்பகுதிகள், கோவில்கள், இசை நிகழ்ச்சிகள், நூலகங்கள், பள்ளி, கல்லூரி விழாக்கள் போன்ற பல இடங்களுக்கு குடும்பத்துடன் சென்று வரவேண்டும்.
3️⃣ விடுமுறைகளில் வெளியூர் பயணம் சென்று குடும்பத்துடன் தங்கி மனம்விட்டுப் பேசி மகிழ்ந்து சிரித்து கொண்டாடிவிட்டு வர வேண்டும். வாழ்க்கை ஒரு கொண்டாட்டம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
4️⃣ ஒவ்வொரு நாளும் குடும்பத்துடன் எல்லோரும் சிறிது நேரமாவது இணைந்திருக்க வேண்டும். அப்படி இருக்கும்போது மகிழ்ச்சியாய், ஈடுபாடாய், முழுமையாய் அன்பு நிறைந்திருக்க வேண்டும்.
5️⃣ குடும்பத்தில் ஒருவரது வெற்றியை எல்லோரும் கொண்டாட வேண்டும். வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ள வேண்டும்.
6️⃣ குடும்பத்தினருடன் இணைந்து நிறைய போட்டோக்கள் எடுத்து ஆல்பம் தயாரிக்க வேண்டும். குடும்பத்தில் எல்லோரும் சேர்ந்து இருக்கும் புகைப்படம் எல்லா நேரமும் கண்ணிலும் படும்விதமாக வீட்டில் இருக்க வேண்டும்.
7️⃣ ஒருவருக்கு சங்கடமோ, தோல்வியோ வந்தால் அனுதாபத்துடன் தனித்தனியாகச் சென்று பேசி ஆதரவு கொடுக்கவேண்டும். அவரைப் பேசச் சொல்லி, அவரது மன உணர்வுகளைக் கேட்டு, அவர் தன் சுமையை இறக்கி வைக்கத் துணை புரிய வேண்டும்,. மீண்டும் ஜெயிக்க குடும்பத்தினர்தான் உற்சாகம் ஊட்ட வேண்டும்.
8️⃣ விழா நேரங்களில் எங்கிருந்தாலும் வந்து கூடி கொண்டாட வேண்டும்.
9️⃣ மனதில் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொரு வரையும் நினைத்து தினமும் வாழ்த்த வேண்டும்.
🔟 உறவுகளுக்குள் ‘தான்’ என்ற அகந்தையான எண்ணம் கூடாது. போலி கௌரவம், மானம், ரோஷம் குடும்பத்தில் வேண்டாம்,. பிரச்சனை எதுவாக இருந்தாலும் உள்ளே போட்டுக் கொள்ளாமல், மனம்விட்டுப் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும்.
1️⃣1️⃣ ‘என்ன திட்டினாலும், கோபித்தாலும், என்னை அவமதித்தாலும், எனக்கு உதவி செய்ய மறுத்தாலும், நான் அன்பு செய்வேன். உங்கள் மேல் நான் வைத்திருக்கின்ற அன்பு பேரானந்தம்’ என உறவுகள் விஷயத்தில் நினைக்க வேண்டும்.
1️⃣2️⃣ குடும்பத்துடன் இணைந்து இறைவழிபாடு, தியானம் செய்ய வேண்டும்.
தத்துவஞானி
வேதாத்திரி மகரிஷி