உறவுகள்கவிதைகள்வாழ்வியல்

உலக தந்தையர் தினம் !

அன்புள்ள அப்பா ! கவிஞர் இரா .இரவி !

அறிவு தந்த அன்புள்ள அப்பா நீங்கள் !
ஆற்றல் ஈந்த அன்புள்ள அப்பா நீங்கள் !
உருகும் உன்னத மெழுகு நீங்கள் !
தேயும் ஒப்பற்ற சந்தனம் நீங்கள் !

தன்னலமற்ற தியாகத்தின் சின்னம் நீங்கள் !
திறமைகளை பயிற்று வித்த ஆசான் நீங்கள் !
சான்றோனாக்கி மனம் மகிழ்ந்தவர் நீங்கள் !
சந்தோசங்களை வழங்கிய வள்ளல் நீங்கள் !

ஓய்வறியாது உழைக்கும் செம்மல் நீங்கள் !
ஒரு நாளும் கவலை கொள்ளாதவர் நீங்கள் !
கடமையைக் கச்சிதமாய் முடித்தவர் நீங்கள் !
மடமையை முழுமூச்சாய் எதிர்த்தவர் நீங்கள் !

பகுத்தறிவை எனக்கு கற்பித்தவர் நீங்கள் !
மூடநம்பிக்கை அகற்றி தன்னம்பிக்கை தந்தவர் நீங்கள் !
எதையும் ஏன்? ஏதற்கு? எப்படி? என்றவர் நீங்கள் !
எவருக்கும் அஞ்சாமல் வாழ்பவர் நீங்கள் !

வாழ்வியல் கருத்துக்களை வழங்கியவர் நீங்கள் !
வாழ்வாங்கு வாழ்ந்து காட்டுபவர் நீங்கள் !
உலகிற்கு வரக் காரணமானவர் நீங்கள் !
உலக அறிவை உணர்த்தியவர் நீங்கள் !

“அப்பா” உறவிற்கு இலக்கணம் வகுத்தவர் நீங்கள் !
அன்பை பொழிவதில் இமயத்திற்கு நிகர் நீங்கள் !

தந்தை ! கவிஞர் இரா .இரவி !

மகனுக்கு அறிவைக் கற்பிப்பிவர் தந்தை !
மகனுக்கு உலகை உணர்த்துபவர் தந்தை !

குடும்ப பாரம் தலையில் சுமப்பவர் தந்தை !
குடும்பத்தின் தலைவராக விளங்குபவர் தந்தை !

தன் குடும்ப மானம் காப்பவர் தந்தை !
தன்னைப் பற்றிய கவலையின்றி வாழ்பவர் தந்தை !

உப்பு மூட்டை சுமந்து விளையாடுபவர் தந்தை !
உப்பெனெ வாழ்வின் அவசியமானவர் தந்தை !

நெறிப்படுத்தி நல்வழி காட்டுபவர் தந்தை !
நன்மை தீமை எடுத்து இயம்புபவர் தந்தை !

தோழனாக இருந்து தோள் கொடுப்பவர் தந்தை !
துவண்டால் தன்னம்பிக்கைத் தருபவர் தந்தை!

வாழ்வியல் உண்மைகளைப் போதிப்பவர் தந்தை!
வாழ்வில் மறக்க முடியாத உன்னதஉறவு தந்தை !

வாடினால் வாட்டம் போக்குபவர் தந்தை !
வளங்களை வழங்கி மகிழ்பவர் தந்தை !

எதிர்நீச்சலிட்டு முன்னேற்றுபவர் தந்தை !
எப்பாடுபட்டாவது உறவுகளைக் காப்பவர் தந்தை !

பொறுப்பை உணர்ந்து நடப்பவர் தந்தை !
பொறுப்பை மகனுக்கு உணர்ர்துபவர் தந்தை !

ஈடு இணையற்ற ஒப்பற்ற உறவு தந்தை !
ஈன்றவளுக்கு இணையான உறவு தந்தை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *