வாழ்வியல்

கவிவேந்தர் மு.மேத்தா அவர்களுக்கு பாராட்டுக் கவிதை !வாழ்க பல்லாண்டு ! கவிஞர் இரா .இரவி !

tamil deepam mumetha

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மண்
சங்கத் தமிழைப் பாராட்டி மகிழ்கின்றது

சாகித்ய அகதெமி விருது உங்களை கௌரவப்படுத்தவில்லை
சாகித்ய அகதெமி விருது உங்களால் கௌரவப்படுத்தப்பட்டது

தமிழர்களைக் கண்டு கொள்ளாத சாகித்ய அகதெமியை
தமிழர்களின்பால் கவன ஈர்ப்பு செய்தவர் மேத்தா

எப்போதோ தரவேண்டிய இந்த விருதை
இப்போதாவது தந்து களங்கம் போக்கியது சாகித்ய அகதெமி

நோபல் பரிசு பெறக்கூடிய தகுதியும், திறமையும்
ஒருங்கே அமையப் பெற்றவர் மேத்தா

கண்ணீர் பூக்கள் கவிதை நூல் இல்லை என்றால் மேத்தா இல்லை
மேத்தாவின் துணைவியார் தங்க வளையல் தரவில்லை என்றால் கண்ணீர் பூக்கள் இல்லை

புதுக்கவிதைகளின் தாத்தா எங்கள் மேத்தா
புதுக்கவிதைகளி;ன் பாடப் புத்தகம் மேத்தா நூல்கள்

புதுக்கவிதை என்றால் என்னவென்று பலருக்கும்
புரியும்படி கவிதை எழுதியவர் மேத்தா

புதுக்கவிஞர்களுக்கான புதிய பாதையில் மலர் தூவி
புத்துணர்வூட்டி இளைஞர்களை வரவேற்றவர் மேத்தா

வார்த்தை வித்தையால் வாசிப்பவரின் உள்ளத்தை
வாரி எடுக்கும் திறமை பெற்றவர் மேத்தா

உள்ளத்தில் உள்ளதை ஒருவருக்கும் அஞ்சாமல்
உரைக்கும் நெஞ்சுரம் மிக்கவர் மேத்தா

புதுக்கவிதை, கவிதையன்று : என்று சொன்ன அதிமேதாவிகள்
புரிந்திடும் வண்ணம் தலையில் கொட்டியவர் மேத்தா

பாரதிதாசனைப் போல புகழையும் அடைந்தார்
திரைப்படம் எடுத்துப் பணமும் இழந்தார் மேத்தா

நான்கு கவிதைகள் எழுதியதும் நான் தான் கவிஞன் என்று கூறும்
நவீன யுகத்தில் எண்ணிலடங்கா கவிதைகளை எழுதியவர் மேத்தா

கவியரங்கில் கவிதை பாடினால் அரங்கமே
கைதட்டலால் உண்மையிலேயே அதிர வைப்பவர் மேத்தா

செந்தமிழ்ச் சொற்களை நாவில் நடனமாட வைத்து
சுண்டி இழுத்து சொக்க வைப்பவர் மேத்தா

இலக்கணம் என்ற கைவிலங்கை
அடித்து நொறுக்கிய வேங்கை மேத்தா

தலைக்கணம் என்றால் என்னவென்றே அறியாத
தன்னடக்கத்தின் சின்னம் மேத்தா

கல்லூரிப் பேராசிரியராக இருந்த காலத்திலேயே
கவிதையில் வெற்றிக்கொடி கட்டியவர் மேத்தா

பேராசிரியர் பணியிலிருந்து ஒய்வு பெற்ற போதும்
கவிதை ஆசிரியர் பணியிலிருந்து என்றும் ஒய்வு பெறாதவர் மேத்தா

வந்தாரை வரவேற்கும் தமிழ்ப் பண்பாடு இன்று
வழக்கொழிந்த காலத்திலும் இனிதே வரவேற்று உபசரிப்பவர் மேத்தா

இயந்திரமயமான சென்னை மாநகரில் வாழ்ந்த போதும்
இயந்திரமாகாமல் இதயத்தை ஈரமாகவே வைத்திருப்பவர் மேத்தா

முத்தமிழ் வித்தகர், மூத்த தமிழறிஞர்
கலைஞரின் அன்பிற்கு என்றும் பாத்திரமானவர் மேத்தா

இன்றைக்கும் கல்லூரி மாணவர்களால் களவாடப்படும்
இனிய காதல் கவிதைக்குச் சொந்தக்காரர் மேத்தா

கவிதை உலகின் முடிசூடா மன்னனே
கற்கண்டு கவி பாடுவதில் எங்கள் அண்ணணே

இலக்கிய உலகில் உயர்ந்த இடம் பிடித்தவரே
இலக்கிய இதயங்களில் சிம்மாசனமிட்டவரே

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment on gist

Most Popular

Tamil Deepam

started to provide the news updates in neutral view for the larger online community of users in Tamil Nadu,India and all over the World.

About Us

TamilDeepam.com was started to provide the news updates in neutral view for the larger online community of users in Tamil Nadu,India and all over the World. We identified this online opportunity used to give the awareness in all aspects to the tamil speaking people.

Copyright © 2021 TamilDeepam.com, powered by Wordpress.

To Top