ஆன்மிகம்தெய்வீக குறிப்புகள்

அரசமர வழிபாடு

1️⃣ அரசமரத்தை வலம் வரும்போது சரியான இடைவெளிவிட்டு மெதுவாக நடக்கவேண்டும். வேகமாக நடக்கக்கூடாது.

2️⃣ இரு கரம் கூப்பி வணங்கியபடி வலம் வருவது நல்லது.

3️⃣ உடன் வருபவருடன் பேசியபடி நடக்கக் கூடாது. பதிலாக இறைவனின் துதி பாடலைப் பாடியபடி சுற்றி வரலாம்.

4️⃣ அரசமரத்தை வலம் வருபவர்கள் குறைந்தபட்சம் 7 முறையும், அதிகபட்சமாக 108 முறையும் வலம் வர வேண்டும்.

5️⃣ சனிக்கிழமைகளில் அரசமரத்தை சுற்றுவது மிகவும் நல்லது.

6️⃣ அரசமரத்தை காலை வேளையில்தான் வலம் வரவேண்டும். மதியவேளையில் நிச்சயமாக வலம் வருவதை தவிர்க்க வேண்டும்.

7️⃣ ஆண்கள் தினமும் 108 முறை வீதம் 3 ஆண்டுகள் தொடர்ந்து வலம் வருவதால் கடன் தொல்லை நீங்கும், பய உணர்ச்சி அகன்றுவிடும், தீராத நோய்கள் தீரும், வியாபாரத்தில் லாபம் கிடைக்கும், உத்யோக உயர்வு கிடைக்கும்.

நன்றி.... 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *