சினிமாதிரைப்படம்

அழியாத கோலங்கள் இட்டவர் பாலு மகேந்திரா ! கவிஞர் இரா .இரவி !

இலங்கை மட்டகளப்பு அமிர்தகழியில் பிறந்தவரே !
இங்கே தமிழகம் வந்து திரையில் சிறந்தவரே !

இலண்டன் மாநகரில் கல்விகள் பயின்றவரே !
இந்தியாவில் புனேயில் ஒளிப்பதிவு கற்றவரே !

திரைஉலகில் தனி முத்திரைப் பதித்தவரே !
தேசிய விருதுகளுக்குப் பெருமை சேர்த்தவரே !

ஈடில்லா ஒளிப்பதிவில் தனிப்பாதை வகுத்தவரே !
இயக்கத்தில் இணையில்லா வெற்றி பெற்றவரே !

இருபத்தியாறு படங்களின் சிறந்த ஒளிப்பதிவாளரே !
இந்தியாவின் மிகச் சிறந்த ஒளிப்பதிவாளரே !

திரைப்பட ஒளிப்பதிவு படிப்பில் தங்கம் பெற்றவரே
திரைப்படப் பட்டறை தொடங்கி பயிற்றுவித்தவரே !

மலையாளத்தில் நெல்லு படம் ஒளிப்பதிவு செய்தவரே !
மலையாள மாநிலத்தின் விருதினைப் பெற்றவரே !

கோகிலா கன்னடப்படம் இயக்கி இயக்கம் தொடங்கியவரே !
அழியாத கோலங்கள் வெண்திரையில் இட்டவரே !

உலகநாயகன் தேசியவிருது பெறக் காரணமானவரே !
இசைஞானியின் இசைப்பசிப் போக்கியவரே !

மூன்றாம் பிறை செதுக்கி முழு நிலவானவரே !
முக்காலமும் விரும்பும் மிகைப் படங்கள் தந்தவரே !

வீடு கட்டும் இன்னலை வீடு படத்தில் உணர்த்தியவரே !
மூடுபனியில் ஒளிப்பதிவு விதைக் காட்டியவரே !

யாதார்த்த திரைபடத்தின் முதல் கர்த்தாவே !
யாரும் நடிக்கலாம் என்பதை மெய்பித்தவரே !

வெற்றி இயக்குனர்களின் நல்ல குருவானவரே !
வெற்றிமாறனின் இயக்குனர் குருவானவரே !

காலத்தால் அழியாத திரைக்காவியங்கள் தந்தவரே !
காற்றில் தேன் இசை கீதங்கள் ஒலிக்க வைத்தவரே !

தமிழ்த்திரை உலகில் வரலாறு படைத்தவரே !
தமிழனின் பெருமையை உலகிற்கு உணர்த்தியவரே !

மாநில மைய அரசுகளின் விருதுகள் பல பெற்றயவரே !
மனதில் படத்தை திரையில் துணிவுடன் வடித்தவரே !

தலைமுறைகள் படத்தில் தாத்தாவாக வாழ்ந்தவரே !
தன்னிகரில்லா தரமான நடிப்பை நல்கியவரே !

உடலால் உலகை விட்டு மறைந்த போதும் !
உன்னத திரைப்படங்களால் உள்ளங்களில் வாழ்வீர் என்றும் !

நன்றி 
கவிஞர் இரா.இரவி 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *