மகள் ! கவிஞர் இரா. இரவி !
உறவுகளில் உன்னதமானவள் மகள்
உயிருள்ளவரை பெற்றோரை நேசிப்பவள்
மணம் முடித்தப்பின்னும் மறக்காதவள்
மனதின் ஓரத்தில் வைத்திருப்பவள்
கவலைகளை மறக்கடிக்கும் ஆற்றல்மிக்கவள்
கண்களின் காட்சிக்கு இனிமைதருபவள்
பார்த்தால் பசி தீரும் நிரூபித்தவள்
பாசத்தில் ஈடு இணையற்றவள்
பெற்றோரைப் பழித்தால் பொறுக்காதவள்
பொங்கி எழுந்து விடுபவள்
இளவரசியாக இல்லத்தில் இருப்பவள்
இளவரசனைவிட பெற்றோரை நேசிப்பவள்
அப்பாவின் செல்லமாய் வளர்பவள்
அம்மாவிடமும் அன்பு செலுத்துபவள்
மனைவி சொன்னால் கேட்காதவனும்
மகள் சொன்னால் கேட்பான்
அப்பாவை ஆற்றுப்படுத்தும் அற்புதமானவள்
அப்பாவை பாசத்தால் கட்டுபவள்
புயலை தென்றலாக்கும் வித்தை கற்றவள்
தென்றலை புயலாக்கும் விவேகம் கற்றவள்
மட்டற்ற மகிழ்வைத் தருபவள்
மற்ற எல்லாவற்றிலும் உயர்ந்தவள்
பெற்றோரின் மீதான பாசத்தில் சிறந்தவர்கள்
மகன்களா ? மகள்களா? பட்டிமன்றம் நடத்தினால்
மகள்களே! என்று தான் தீர்ப்பு வரும் காரணம் மகள்களே என்றும் மகத்தானவர்கள்
நன்றி கவிஞர் இரா.இரவி