புதுக்கோட்டையில் நடிகர் விவேக் நினைவாக மரக்கன்றுகள் விநியோகம் | Distribution of saplings
மறைந்த நடிகர் விவேக் நினைவாக புதுக்கோட்டை கிழக்கு 7-ம் வீதியில் உள்ள தர்மராஜ பிள்ளை நினைவு தொடக்கப் பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் இலவசமாக நேற்று வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு ‘மரம்’ அமைப்பின் தலைவர் ராஜா தலைமை வகித்தார். இதில், அமைப்பின் நிர்வாகிகள் மருத்துவர் ஜி.எட்வின், சா.விஸ்வநாதன், மூர்த்தி, கண்ணன், சிலம்பம் பாசறையின் நிர்வாகி பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதேபோல, மறைந்த நடிகர் விவேக் நினைவாக மரக்கன்று கள் நடும் நிகழ்ச்சி அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள இரும்புலிக்குறிச்சி கிராமத்தில் நேற்று நடைபெற்றது. இதில், இரும்புலிக்குறிச்சி பெரிய ஏரிக்கரையில் 20-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை அந்த கிராம மக்கள் நட்டு வைத்தனர்.