Truke air buds launched (ட்ரூக் வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம் )
ட்ரூக் நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புதிய இயர்பட் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இவை ஏர் பட்ஸ் மற்றும் ஏர் பட்ஸ் பிளஸ் என அழைக்கப்படுகின்றன. இரு இயர்பட்களிலும் 55ms லோ-லேடென்சி கேமிங் எக்ஸ்பீரியன்ஸ், ஆடியோ இன்-இயர் டிடெக்ஷன் சென்சார், ப்ளூடூத் 5.1 டிரான்ஸ்மிஷன், SBC கோடெக், 20 EQ மோட்கள், AI பவர்டு நாய்ஸ் கேன்சலேஷன் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ட்ரூக் ஏர் பட்ஸ் மற்றும் ஏர் பட்ஸ் பிளஸ் மாடல்களை முழு சார்ஜ் செய்தால் 8 முதல் 10 மணி நேரத்திற்கான பிளேபேக் வழங்குகிறது. சார்ஜிங் கேஸ் சேர்க்கும் பட்சத்தில் இந்த இயர்பட்கள் 48 மணி நேரத்திற்கான பிளேபேக் வழங்குகின்றன. இத்துடன் பேட்டரி அளவை அறிந்து கொள்ள சிறிய ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது.
ட்ரூக் பட்ஸ் S2 மாடல் ஏப்ரல் 24 ஆம் தேதி வரை இந்திய சந்தையில் ரூ. 1499 எனும் சிறப்பு விலையில் கிடைக்கும். 55ms வரையிலான அல்ட்ரா லோ லேடென்சி உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது. இதில் உள்ள ப்ளூடூத் 5.1 அம்சம் இருமடங்கு வேகமாக இணைப்புகளை சாத்தியப்படுத்துவதோடு, சீரான இணைப்பையும் உறுதி செய்கிறது.

இந்தியாவில் ட்ரூக் ஏர் பட்ஸ் விலை ரூ. 1,599 , என்றும் ஏர் பட்ஸ் பிளஸ் விலை ரூ. 1,699 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது அறிமுக விலை என்பதால் எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படலாம். இரு மாடல்களும் அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.