“மூன்றாம் கலைஞர் வேண்டாம்… என்னை சின்னவர் என்றே அழையுங்கள்” – உதயநிதி வேண்டுகோள்
புதுக்கோட்டை: என்னை மூன்றாம் கலைஞர், இளம் தலைவர் என்று அழைக்க வேண்டாம். சின்னவர் என்று மட்டுமே அழையுங்கள் என திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற திமுகவின் மூத்த நிர்வாகிகள் 1,051 பேருக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, உதயநிதி ஸ்டாலின் பேசியது: "இந்த இடத்தில் பேசிய கருணாநிதி முதல்வரானார், மு.க.ஸ்டாலின் முதல்வரானார் என்றெல்லாம் கூறி இந்த மைதானத்தை ராசியான இடமாக கூறினார்கள். அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், திமுகவினரின் உழைப்பில், அன்பில் மட்டும் நம்பிக்கை உண்டு.