தோற்பது கண்ணியமானது! ஆபிரஹாம் லிங்கன்
அமெரிக்க அதிபராக இருந்த ஆபிரஹாம் லிங்கன், தன் மகனுக்கு என்ன கற்பிக்கப்பட வேண்டும் என்று அவனது ஆசிரியருக்கு விடுத்த வேண்டுகோள் கடிதம் :
👍 யாரும் முற்றிலும் நேர்மையானவர் கிடையாது; உண்மையானவர்கள் கிடையாது. இதை அவனுக்கு சொல்லுங்கள்.
👍 தோல்வியை ஏற்றுக் கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடும் கற்றுக் கொடுங்கள்.
👍 பெருமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.
👍 மனம் விட்டுச் சிரிக்கும் ரகசியம் அவனுக்கு தெரியட்டும்.
👍 வெட்டிப் பேச்சுக்கு அடிமையாவது எளிது என்பதை அவன் சிறு வயதிலேயே அறியட்டும்.
👍 இயற்கை விநோதங்களை அலசி ஆராய அவனுக்கு நேரம் கொடுங்கள்.
👍 பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியமானது என்பதைக் கற்றுக் கொடுங்கள்.
👍 எத்தனை பேர் கூடி ‘தவறு’ என்று சொன்னாலும், சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் செய்யுங்கள்.
👍 மென்மையானவர்களிடம் வென்மையாகவும், உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடக்கக் கற்றுக் கொடுங்கள்.
👍 துன்பப்படும் போது அவன் சிரிக்கட்டும். அத்துடன் கண்ணீர் விடுவது அவமானம் இல்லை என்பதையும் உணர்த்துங்கள்.
👍 குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும். அளவுக்கு அதிக இனிமையுடன் பேசுபவரிடம் எச்சரிக்கையாக இருக்கவும் சொல்லக் கொடுங்கள்.
👍 தன் மனதுக்கு ‘சரி’ என்று தோன்றுவதை துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள். (ஆபிரஹாம் லிங்கன்)
👍 எப்போதும் எதிலும் ஆவல் மிக்கவனாக இருக்க அவனுக்குச் சொல்லி கொடுங்கள்.
👍 தன்னம்பிக்கையில் அசைக்க முடியாத நம்பிக்கை கொள்ளச் செய்யுங்கள்.
இவையெல்லாம் மிகப்பெரிய, கடினமான நடைமுறைகள்தான். ஆனால் உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். ஏனெனில் இனிமையான என் மகன் மிகவும் சிறியவன்!
அமெரிக்க அதிபராக இருந்த ஆபிரஹாம் லிங்கன்
நன்றி…