ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !
அன்பு என்ற விதை
விருட்சமானது
காதல் !
தேவதை சாத்தான்
இரண்டும் உண்டு
மனதில் !
ஓராயிரம் அதிர்வுகள்
கண்டதும் உள்ளத்தில்
அவள் புன்னகை !
தங்கக்கூண்டும்
சிறைதான்
கிளிக்கு !
வெல்வேன் என்ற
நினைப்பே
முதல் வெற்றி !
ஆடிப்பட்டம்
தேடி விதைத்தனர்
வீட்டடி மனை கற்கள் !
படியில் பயணம்
நொடியில் மரணம்
படித்துவிட்டு படியில் !
கரம் சிரம் புறம்
நீட்டாதீர்கள்
படித்துவிட்டு நீட்டினர் !
மாற்றுத்திறனாளி நிற்கையில்
மாற்றுத்திறனாளி இருக்கையில்
மற்றவர்கள் !
அன்று தொண்டு
இன்று கொள்ளை
கல்வி நிறுவனங்கள் !
உருவமின்றியும் தாலாட்டியது
கிளைகளை
தென்றல் !
Warning: Attempt to read property "term_id" on bool in /home/u859506492/domains/tamildeepam.com/public_html/wp-content/themes/flex-mag/functions.php on line 982