கதைகளின் காரணங்கள்.. 2 சூர்யா ரெங்கசாமி
மலையாடு மாதிரி மண்டையில மயிர வச்சுக்கிட்டு ..
பொழுதுக்குள்ள முடிவெட்டி வரல- பொத்த பானதான் தலைக்கு வரும் –
அம்மா
காசு வேணும் கடைக்கு போக என்றால்
குடுக்குற நெல்லுக்கு கொஞ்சமாவது அவனுக்கு வேலை குடுங்கடா
நம்ம ஊரு ஆளுகிட்ட போய் வெட்டி வா.
பல ஆண்டுகள் பழக்கம் இருந்தும் , படியவில்லை -இன்னமும்
பக்குவமாய் வெட்டி விட அவனுக்கு.
கத்தரியில் வெட்ட சொன்னால் கத்தியாலே வெட்டும் வேலைக்காரன்
சிகை வெட்டவா? ,சிரம் வெட்டவா? போறோம் என்று தெரியாமலே
போய் சேர்ந்தேன் -தலையை குடுத்து
முடி வெட்ட சொன்னேன் ….
என்னடா வெட்டி இருக்க மலையாடு மயிறு போல-
சொட்ட சொட்ட யா -அம்மா
பொங்கி வரும் கண்ணீரையும் வார்த்தைகளையும் மடக்கி
முடி இல்லா மண்டையை தடவி கொண்டே ..
அய்யோ ! அம்மா ! நீ மலையாடு பார்த்து இருக்கியா? இல்லையா ?
அந்த கழுதைய நான் எங்கடா கண்டேன்- அம்மா
ஆயிரம் கதைகள் சொல்லுபவள்..
கதைகளின் காரணங்கள்.. 2
சூர்யா ரெங்கசாமி