அந்த 80 வயது முதியவர், டாக்டரைப் பார்க்க வந்திருந்தார்; அவரை உட்காரச் சொன்ன நர்ஸ், “டாக்டர் கொஞ்ச நேரத்துல வந்துடுவார்; வெயிட் பண்ணுங்க!” என்றாள்.
நேரம் ஆக ஆக… அவர் தன் வாட்சைப் பார்த்தபடி பொறுமையிழந்து,. “டாக்டர் எப்போ வருவார்?” என்று நச்சரித்தார். அன்பு
“அப்படி என்ன முக்கியமான வேலை உங்களுக்கு இருக்கு?” என்றாள் நர்ஸ்.
“என் மனைவி உடம்புக்கு முடியாம ஆஸ்பத்திரியில இருக்கா… நான் அவளோட போய் சாப்பிடணும்” என்றார் முதியவர்.
“அவங்களுக்கு என்ன ஆச்சு?” அன்பு
“அவளுக்கு ஞாபகமறதி. அஞ்சு வருஷமா எல்லாத்தையும் மறந்துட்ட; நான் போகலைன்னா, டிபன் சாப்பிடறதையும் மறந்துடுவா! ” அன்பு
“எல்லாத்தையும் மறந்துட்டாங்கன்னா… உங்களையுமா? “
” ஆமா… தினமும் என்னைப் பார்த்து, ‘நீங்க யாரு’ ன்னு கேட்கற!”
“உங்களைத்தான் அவங்களுக்கு அடையாளம் தெரியலையே… அப்புறம் ஏன் தினம் போறீங்க? “- புரியாமல் கேட்டாள் நர்ஸ். அன்பு
முதியவர் அமைதியாகச் சொன்னார்… “நான்தான் கணவன் என்பது அவளுக்கு மறந்து போயிருக்கலாம். ஆனால் அவள்தான் என் மனைவி என்பதை நான் எப்படி மறக்கமுடியும்?”
நன்றி....

Warning: Attempt to read property "term_id" on bool in /home/u859506492/domains/tamildeepam.com/public_html/wp-content/themes/flex-mag/functions.php on line 982