உலகின் முதல் மொழியான தமிழ் செம்மொழி என்று அறிவித்த நாள் – ஜூன் 6 | கவிஞர் இரா. இரவி!
உலக மொழிகளின் தாய் மொழியாக தமிழ் மொழி பேசும் தமிழராகப் பிறந்ததற்காக உலகத் தமிழர் அனைவரும் பெருமை கொள்வோம் !
உலக மொழிகளின் மூலம் தமிழ்மொழிஇலக்கண இலக்கியங்களின் குவியல் தமிழ்மொழி
இனிய உச்சரிப்பின் இனிமை தமிழ்மொழி
உலகப் பொதுமறையை உலகிற்கு தந்திட்ட தமிழ்மொழி
உலகமொழிகளின் மூலம் ஒப்பற்ற தமிழ்மொழி
காவியங்களும் காப்பியங்களும் நிறைந்த தமிழ்மொழி
கனிச்சாறையும் கற்கண்டையும் மிஞ்சிய தமிழ்மொழி
எண்ணிலடங்கா சொற்கள் கொண்ட தமிழ்மொழி
எண்ணத்தை உயர்வாக்கும் உயர்ந்த தமிழ்மொழி
பழமைக்கு பழமையான தொன்மைமிகு தமிழ்மொழி
புதுமைக்கு புதமையான புத்துணர்வுமிகு தமிழ்மொழி
இணையத்தில் கொடிகட்டிப் பறக்கும் தமிழ்மொழி
இணையில்லாப் புகழ்மிக்கக உயர்தனித் தமிழ்மொழி
முதல் மனிதன் பேசிய முதல்மொழி தமிழ்மொழி
மூத்தோரை மதிக்கும் மரியாதை மிக்க தமிழ்மொழி
உலகிற்கு பண்பாட்டை பறைசாற்றும் தமிழ்மொழி
உலக இலக்கியங்களில் முதன்மையானது தமிழ்மொழி
மனிதநேயத்தை முன்மொழியும் மொழி தமிழ்மொழி
மனிதனை மனிதனாக மதிக்கும் நல் தமிழ்மொழி
பல்லாயிரம் ஆண்டுகளாக நிலைத்திருக்கும் தமிழ்மொழி
பல நூறு மொழிகளில் சிறந்திருக்கும் தமிழ்மொழி
புலவர்கள் பலரை உருவாக்கிய தமிழ்மொழி
அறிஞர்கள் பலரை செதுக்கிய தமிழ்மொழி
விஞ்ஞானிகள் பலரை வளர்த்த தமிழ்மொழி
மெஞ்ஞானிகள் பலரை வழங்கிய தமிழ்மொழி
இயல்,இசை,நாடகம் சிறந்து விளங்கிடும் தமிழ்மொழி
எத்திக்கும் முத்தமிழிலும் முத்திரை பதித்திடும் தமிழ்மொழி
அகமும் புறமும் அழகாக விளங்கும் தமிழ்மொழி
அற்புத உறவுகளுக்கு தனித்தனி சொல்லழகு தமிழ்மொழி
முல்லை,மருதம்,குறிஞ்சி,நெய்தல்,பாலை பாடிய தமிழ்மொழி
மூச்சாக உலகத் தமிழருக்கு விளங்கிடும் தமிழ்மொழி
மனதை இளமையாக்கும் இனிய தமிழ்மொழி
மமதையை அழித்து ஒழித்திடும் தமிழ்மொழி
தாலாட்டு தொடங்கி ஒப்பாரி வரை இனிய தமிழ்மொழி
தமிழனின் பிறப்பு முதல் இறப்பு வரை தொடரும் தமிழ்மொழி
ஒரு எழுத்தில் பொருள் கூறும் தமிழ்மொழி
ஒரு எழுந்து மாறினால் பொருள் மாறும் தமிழ்மொழி
காந்தியடிகள் மனதார புகழ்ந்திட்ட தமிழ்மொழி
தமிழனாக பிறந்திட ஆசைப்பட வைத்த தமிழ்மொழி
கவிஞர்கள் கட்டித் காத்த கரும்பு தமிழ்மொழி
கவிதைகள் கட்டித்தங்கம் போன்ற தமிழ்மொழி
உலகம் உள்ளவரை என்றும் நிலைக்கும் தமிழ்மொழி
உலகில் ஈடு இணையற்ற உன்னதமொழி தமிழ்மொழி!
நன்றி..
கவிஞர் இரா. இரவி