பத்தாயிரம் மையில் பயணம்! வெ. இறையன்பு V. Irai Anbu (ரோஜாவின் ராஜபாதை)
V. Irai Anbu (Tamil: வெ. இறையன்பு) is an IAS Officer, writer, educator, social activist and motivational speaker. He is the current Chief Secretary of Tamil Nadu Government .
பத்தாயிரம் மையில் பயணம்
சிறுகதைகள் : ரோஜாவின் ராஜபாதை
ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே ஆசிய கண்டத்தில் தோன்றியதாக தொல்லியல் அறிஞர்களால் கூறப்படும் ரோஜாவின் பயணப்பாதை மெத்தென்று மனதை மயக்கும்.
ரோஜாவை பற்றி அமிதாபா முகோபாத்யாய் எழுதிய நூல் இனிய தகவல் களஞ்சியம்.
ரோஜா ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு பரிணாம வளர்ச்சியில் பரிமளித்தது என்றும் அது ஆசிய கண்டத்தில் தான் தோன்றியது என்றும் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
கிமு 1600 ஆம் ஆண்டில் சார்ந்த ‘கிரேட்’ நாட்டு ஓவியர்களின் ரோஜாக்களை காண முடிகிறது. கிரேக்கர்கள் தாம் ரோஜாவை முதலில் பயிரிட்டவர்கள். தோட்டங்களிலும், பானைகளிலும் கிரேக்க நாடு முழுவதும் ரோஜாக்கள் பயிரிடப்பட்டன. கிரேக்க பெண் கவிஞர் சேப்போ என்பவர் தான் முதன் முதலில் அதை ‘பூக்களின் ராணி’ என பெயர் இட்டு புளகாங்கிதம் அடைந்தார்.
ரோஜா உருவானது பற்றிய புனைகதைகள் கிரேக்கத்தில் ஏராளம்.
தன் காதலன் அடோணிஸை சந்திக்க வீனஸ் காடு வழியாக விரைந்த போது, ஒரு முள் அவள் காலை குத்தி விட்டதாம். வழிந்த ரத்தம் மண்ணில் விழுந்தது, அதிலிருந்து சிகப்பு ரோஜாக்கள் மலர்ந்ததாகவும் ஒரு ‘லெஜன்ட்’.
சைபெல் என்பவர் வீனஸ் தேவதையின் கர்வத்தை குறைக்க நினைத்தாராம். அதனால் அவளே பொறாமைப்படும் அளவு அழகுடன் ஒரு மலரை படைத்தாராம். இதுதான் ரோஜாவாம்.
ஆதாம், ஏவாளோடும் தொடர்பு படுத்தி புணையக் கதை ஒன்று உண்டு. ஏடன் தோட்டத்திலிருந்து ரோஜா வெள்ளையாகத்தான் இருந்ததாம். ஏவாள் அதன் அழகில் மயங்கி அதற்கு முத்தம் கொடுக்க அது நாணத்தால் சிவக்க சிவப்பு நிறமாக மாறிவிட்டது.
சரித்திர இயலின் தந்தை என்று அழைக்கப்படும் ‘ஹிரோடோட்டஸ்’ கிமு ஏழாம் நூற்றாண்டில் மைதாஸ் என்கிற அரசர் மேசிடோனியாவிற்கு தஞ்சம் தேடிச் சென்று, திரும்பி வரும்போது ரோஜாவை கொண்டு வந்ததாக கூறுகிறார்.
கிரேக்க, ரோமானிய கற்பனையியலில் ரோஜாவை அழகோடும், காதலோடு இணைத்து பேசுவது மரபு. ரோபின்தே என்கிற கிரேக்க பெண் மிகவும் அழகாக இருந்தாளாம். அவளை அடைய விரும்பி சிலர் துரத்திய காரணத்தால், அவள் தப்பித்து ஓடி ஆர்டிமிஸ் கோயிலில் அபயம் அடைந்தாள். அவளை அந்த கோயிலின் பெண் தெய்வம் ஆர்டிமிஸ் ரோஜாவாக மாற்றியது. அவளுடைய இளஞ்சிவப்பு கன்னங்களில் வண்ணம் மாறாமல் மாற்றியதால் தான் இவ்வளவு அழகாக ஒளிர்கிறதாம்.
ரோமானியர்களுக்கு ரோஜாவின் மீது அபரிமிதமான காதல் இருந்தது. அவர்கள் தங்கள் மெத்தைகளையும், தலையணைகளையும் கூட ரோஜா இதழ்களால் நிரப்பினார்கள். மதுவில் ரோஜா இதழ்களை மறுக்கிறார், போதையை தாமதப்படுத்துமாம். ஆடம்பரமாக வாழ்ந்த எலகாபேலஸ் என்கிற ரோமபுரி அரசர், தன் அரண்மனைக்கு வந்த விருந்தினர்கள் மீது ஏகப்பட்ட ரோஜா இதழ்களை மேலே இருந்து தூவும்படி செய்தாராம். அவர்கள் அவற்றில் புதைந்து, மூச்சு விடாமல் மூச்சு விட முடியாமல் இறந்து போனார்களாம்.
நீரோ மன்னர் பல்லாயிரம் பொன் செலவழித்து விருந்தினர் வரும்போது ரோஜாக்கள் வாங்கிய அலங்காரம் செய்து பிரமாதப்படுத்துவாராம். ஒருமுறை கிளியோபெட்ரா, ஆண்டனியை வரவேற்க மகத்தான ஏற்பாடு செய்தாளாம். அவள் அறையில் 50 சென்டி மீட்டர் உயரத்தில் ரோஜா இதழ்களை பரப்பி கம்பளமாக மாற்றினாளாம். ரோமின் ரோஜா தேவையை எகிப்து தான் பூர்த்தி செய்து வந்தது. அலெக்சாண்டர் காலத்தில், எகிப்து ரோஜாவை அதிகமாக பயிரிட்டது.
ஒவ்வொரு நாட்டிலும் ஒரு புனைகதை இருக்குமளவு ரோஜாவின் வசீகரம் அலாதியானது. பெத்லஹேமில் ஒரு கதை. ஜில்லா என்கிற பெண்ணின் கற்பில் சந்தேகம் ஏற்பட அவளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. கட்டைகளுக்கு நடுவே கட்டி, தீ வைப்பது தான் தண்டனையை நிறைவேற்றும் முறை. அவளோ கலங்கமற்றவள் கடவுளிடம் தன் கற்பை நிரூபிக்கும் படி மன்றாட, எரிந்து கொண்டிருந்த மரக்கட்டைகள் சிவப்பு ரோஜாக்கள் ஆகும் எரியாதவை வெள்ளை ரோஜாவும் மாறியது.
பாரசீகப் பாரம்பரியத்தில் ரோஜா வானம்பாடியோடு தொடர்புடையது. ரோஜாவை பறிக்கும் ஒவ்வொரு முறையும், பறவைகள் எதிர்த்து குரல் கொடுக்குமாம். இயேசுவிற்கு முன்பு பாலஸ்தீனத்தில் ரோஜாக்கள் பயிரிடப்பட்டதாக சான்றுகள் உள்ளன.
இந்து புராணங்களிலும் இது போன்று புனைகதை உண்டு. விஷ்ணு குளத்தில் குளிக்கும் போது ஒரு தாமரை மலர்ந்ததாம். அப்போது பிரம்மா உலகிற்கு அழகிய மலர் தாமரைதான் என்று சொன்னாராம். அதற்கு விஷ்ணு பிரம்மாவை வைகுண்டத்திற்கு அழைத்து அங்கிருந்த ரோஜா மலர்களை காண்பித்தாராம். அதை பார்த்த பிரம்மா ரோஜா தான் அழகானது என்று ஒப்புக்கொண்டாராம்.
சுமேரிய அரசர் சார்கான், முகாமிலிருந்து திரும்பி வரும்போது ரோஜா, திராட்சை போன்றவற்றை கொண்டு வந்தாராம்.
தொடக்க காலத்தில் இங்கிலாந்தில் ரோஜா அவ்வளவு முக்கியம் பெறவில்லை. அது ‘ரோம் மலராக’ கருதப்பட்டது. ஐந்து, ஆறாம் நூற்றாண்டுகளில் தான் அது முக்கியத்துவம் பெற ஆரம்பித்தது.
இங்கிலாந்தில் நடைபெற்ற ரத்த யுத்தத்திற்கு ‘ரோஜாக்களின் போர்’ என்று பெயர். 1455 முதல் 1485 வரை நடந்த யுத்தம் அது. யார்க்குடைய சின்னம் வெள்ளை ரோஜா, லன்காஸ்டருடையது சிவப்பு ரோஜா. அவர்களுடைய சண்டை சமாதானத்தில் முடிய ஒரு திருமண உதவியது. யார் இளவரசி எலிசபெத்தை ஹென்றி ட்யூடர் திருமணம் செய்து, சமரசம் விழுந்தது.
நெப்போலியன் உடைய மனைவி ஜோசப்பின் தீவிர ரோஜா வெறியர். 250க்கும் மேற்பட்ட ரோஜா செடிகளை அவர் சேகரித்து வைத்திருந்தார். ஒவ்வொரு ஒரு ரகம். இப்போது அது ரோஜா அருங்காட்சியமாக திகழ்கிறது.
இமயமலையில் பல காட்டு ரோஜாக்கள் வாழ்ந்தன. ‘அதிமஞ்சுளா’ ‘செமண்டிகா’ போன்ற சமஸ்கிருத புத்தகங்களில் ரோஜாவை பற்றி குறிப்பிடப்பட்டிருக்கின்றனவாம். கிபி 100-ம் வாக்கில் எழுதப்பட்ட ஆயுர்வேத குறிப்புகளில்’சாரக்கா’ ரோஜா பற்றி எழுதியுள்ளார்.
முகலாயப் பேரரசை இந்தியாவில் நிறுவிய பாபர், மஸ்க் ரோஜா, டமாஸ்டிக் ரோஜாவை, ஆக்ராவிற்கு அருகில் 1526 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தினாராம். தன் மகள்களை ரோஜாக்களில் வேறுபட்ட பெயர்களால் அழைத்து மகிழ்ந்தார். அவருடைய மகள்களிலேயே அழகிய பெண்ணுக்கு ‘குல்பதான்’ என்று பெயர். அந்த பெண்தான் ‘அக்பர் நாமா’ விற்கு பங்களிப்பு செய்தவர்,
ஏற்கனவே குறிப்பிட்டது போல ஆரம்பத்தில் ரோஜாவை கிறிஸ்துவர்கள் விரும்பவில்லை. ஆனால் கிபி 400 வாக்கில் ரோமன் கத்தோலிக்கா சர்ச்சுகளில் அதற்கு ‘மவுசு’ ஏற்பட்டது. ரோஜாவின் ஐந்து இதழ்களை கிறித்துவின் ஐந்து காயங்களாக பாவித்தனர். கன்னிமாரியின் கவலையை சிகப்பு ரோஜாவும், மகிழ்ச்சியை வெள்ளை ரோஜாவும், புகழை மஞ்சள் ரோஜாவும் குறிப்பிடுவதாக உருவாக்கப்படுத்தினர்.
37 ஆயிரம் மடாலாயங்களின் வாழ்ந்த கிருத்துவ பாதிரியார்கள் ரோஜாக்கள் பயிரிடும் முறையை கலையாக வளர்த்தனர்.
பாரசீகர்களின் ‘அவெஸ்தா’ என்ற வேத புத்தகத்தில் ரோஜா புனித மதகுறியீடு. பண்டைய பாரசீகத்தில் அது ரகசியத்தின் அடையாளம். கிரேக்கர்களும், ரோமானியர்களும் முக்கியமான விஷயங்களை பேசும்போது ‘மந்தணம்’ என்பதை உணர்த்த மேசையின் மீது ரோஜா மலர்களைத் தொங்கவிடுவார்கள். காதலுக்கு ரோஜாவை தருவது கூட, ‘நம் காதலை ரகசியமாக வைத்திரு’ என்று கூறுவதற்காக தானா!
கெய்ரோடிலிருந்த மசூதிகளின் ரோஜா வடிவ ஜன்னல்கள் இருந்தன. பின்னர் கிறித்துவ கோயில்களிலும் அதே போன்று ஜன்னல்கள் மத்திய காலங்களிலும் இடம் பெற ஆரம்பித்தன. சிலுவைப் போரில் இருந்து திரும்பி வந்தவர்கள், அவ்வடிவ ஜன்னலை பிரெஞ்சு நாட்டில் அறிமுகப்படுத்தினார்கள்.
இந்தியாவில் திருமணத்தில் ரோஜா மலர்கள் பிரசித்தம். உதிர்ந்த ரோஜா இதழ்களைக் கொண்டே ரங்கோலிகளும் அபாரம்.
நாடுவிட்டு நாடு பயணித்த ரோஜா, கவிஞர்களின் மனதை களவாடியதால் இலக்கியங்களிலும் மனம் கமழச் செய்தது.
அனக்ரியான் என்கிற கிரேக்க கவிஞர் “ரோஜா கடவுளின் வாசனை திரவியம்: மனிதனின் மகிழ்ச்சி* என்று குறிப்பிட்டார்.
பிளைனி” மலர் வளையலுக்கான பொருட்கள் இந்தியாவிலிருந்து, இன்னும் தூர தேசங்களில் இருந்தும் வருகின்றன” என்று எழுதினார்.
கன்பூசியஸ் அவருடைய காலகட்டத்தில் சீன அரசிடம் ரோஜாவை பற்றி 600 புத்தகங்கள் இருந்ததாக எழுதியிருக்கிறார்.
ஷேக்ஸ்பியர் தன்னுடைய நாடகத்தில் 60 முறை ரோஜாவை உவமையாக காட்டியிருக்கிறார். தாமஸ் முர்” நீ பூஞ்சாடியை உடைத்தாலும் ரோஜாவின் மணம் அங்கு வீசிக்கொண்டிருக்கும் “என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழில் எண்ணற்ற இடங்களை ரோஜாவின் அழகு குறிப்பிடப்பட்டுள்ளது. பண்டித நேரு தன் சட்டையில் ரோஜாவை குத்தி இருப்பார். அவரை “ரோஜாவின் ராஜா” என்று குறிப்பிட்டு கண்ணதாசன் கவிதை எழுதி இருப்பார்.
தாகூர்” காலை கதிரவனை கண்டு/ ரோஜா மலர்ந்து முணுமுணுத்தது:/ உன்னை நான் ஒருபோது மறவேன்/ என்று சொல்லியவாறே மண்ணில் விழுந்து” என்று பாடியிருப்பார்.
துக்ளக் செப்பு நாணயங்களில் நிறைய கள்ள நாணயங்கள் புழங்கத் தொடங்கியதால் அவற்றையெல்லாம் புதைத்து ரோஜா தோட்டம் எழுப்பியதாக ‘துக்ளக்’ நாடகத்தில் கிரீஷ் கர்னாட் எழுதியிருப்பார்.
இன்றியிருக்கும் பல நவீன ரோஜா வகைகள் சீன ரோஜாக்களையும், ஐரோப்பிய ரோஜாக்களையும் கலப்பு செய்ததால் உருவாகின முதல் கலப்பின ரோஜாவின் பெயர் ‘லா பிரான்ஸ்’, அது கில்லட் என்பவரால் 1867 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இன்று கருப்பு நிறத்தில் கூட ரோஜாக்கள் இருக்கின்றன.
இந்தியாவில் ரோஜாக்களின் சாம்ராஜ்யம் மொகலாயர்களால் உண்டானது. அத்தரை உருவாக்கியது நூர்ஜஹான். அவர் ‘அத்தர்- இ- ஜஹாங்கிரி’ என்று பெயரிட்டார். முகலாயப் பேரரசர்களுடன், ராணிகளும் ரோஜா திரவியத்தில் குளிப்பார்கள். அப்படி குளிக்கும் போது, தண்ணீரின் பரப்பில் போச்சா எண்ணெய் துளிகளை நூர்ஜஹான் பார்வையிட்டார். அப்போதுதான் அத்தர் கண்டுபிடிக்க பொறி தட்டியது அவருக்கு.
இன்று ஏதேனும் பூந்தோட்டத்திற்குச் சென்றால் அங்கு ரோஜாக்களுக்கென இருக்கும் பகுதியில் தான் அதிக கூட்டம் இருப்பதை பார்க்கலாம். அந்த அளவு ரோஜா நம் ஒவ்வொரு மனதிலும் ராஜாவாக இருக்கிறது.
ஏடன் தோட்டத்தில் இருந்த ரோஜா வெள்ளையாகத்தான் இருந்ததாம். ஏவாள் அதன் அழகில் மயங்கி அதற்கு முத்தம் கொடுக்க, அது நாணத்தால் சிவக்க, சிவப்பு நிறமாக மாறிவிட்டது.
👇👇👇👇👇👇👇
சிறுகதைகள் : கோப்பைகளில் பயணித்த தேனீர்
https://tamildeepam.com/tamil-deepam-aadhiya-kadhai-irai-anbu-tea-tamildeepam/
சிறுகதைகள் : சாக்லேட் சுவடுகள்
https://tamildeepam.com/tamil-deepam-kadhai-irai-anbu-travel-by-ten-thousand-chocolate-tamildeepam/