துளிப்பா கவிஞர் இரா.இரவி
துளிப்பா
எழுத்திலும் அநீதி
ஆண் நெடில் தொடக்கம்
பெண் குறில் தொடக்கம் !
அன்று அநீதி
ஆணுக்கு கைச் சிலம்பு
பெண்ணுக்கு காலச் சிலம்பு !
பெண்ணுரிமைப் பற்றிப் பேசிவிட்டு வந்து
எதிர்த்துப் பேசிய இல்லத்தரசியை
எட்டி உதைத்தார் !
ஆடு மாடுக்குப் பெண் பிறந்தால் மகிழ்ச்சி
பெண்ணிற்குப் பெண் பிறந்தால்
ஏன் ? இகழ்ச்சி !
கருவறையிலேயே கல்லறைக் கட்டும் அவலம்
இன்றும் தொடர்வது
இந்திய அவமானம் !
தாய்ப்பாலுக்குப் பதில்
கள்ளிப்பால் தரும் கொடுமை
மடமையை ஒழியட்டும் !
ஜான் பிள்ளை என்றாலும் ஆண் பிள்ளையென்று
பிஞ்சிலேயே ஆணாதிக்கம் விதைப்பதை
நிறுத்துங்கள் !
பெண் புத்தி பின் புத்தி அல்ல
பெண் புத்தி சிறந்த உத்தி
ஆறு நூறாகும் !
நன்றி கவிஞர் இரா.இரவி