திடீரென கிளம்பிய ‘மணல் புயல்..’ கும் இருட்டு.. திகில் கிளப்பிய பட்டினப்பாக்கம்.. மக்கள் ஓட்டம்
மணல் புயல் மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதன் காரணமாகத்தான் இவ்வாறு மணல் கிளம்பி அந்த பகுதிகளில் புழுதிப்புயல் போல காணப்பட்டது என்கிறார்கள்.
இப்படியெல்லாம் நிலைமை மோசமாகும் என்பதை கணித்துதான், 24 மணி நேரத்திற்கு சென்னை மக்கள் அனாவசியமாக வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அரசு கேட்டுக் கொண்டிருந்தது. ஆனால் அதையும் மீறி மெரினா கடற்கரையில் கூட்டம் கூட்டமாக மக்கள் கூடியிருந்தார்கள்.
மக்கள் ஓட்டம் அரசு எச்சரித்தும் ஏன் வந்தீர்கள் என்று கேட்டபோது, “ஜாலிக்காக இங்கே வந்தோம்” என்று அவர்கள் தெரிவித்தனர். ஆனால் பட்டினப்பாக்கம் கடற்கரையில் வீசி எறிந்த மணல் புயலை பார்த்ததும், அங்கே காற்றை ஜாலியாக பார்வையிட வந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். அதையும் மீறி நின்று கொண்டிருந்தவர்கள் கண்கள், மூக்கு உள்ளிட்டவற்றுக்குள் மணல் சென்ற காரணத்தால் அவர்கள் பெரும் தொல்லைக்கு உள்ளாகினர்.