தமிழைக் காக்கத் தகுந்த வழிகள்! கவிஞர் இரா. இரவி!
மொகஞ்சதாரோ அரப்பா நாகரிகத்திற்கும்
முந்தைய நாகரிகம் தமிழன் நாகரிகம் !
உலகின் எந்த மூலையில் தேடினாலும்
உடன் தென்படுவது தமிழ் எழுத்துக்களே !
மனிதன் தோன்றியபோது தோன்றிய மொழி
முதல் மனிதன் உச்சரித்த மொழி தமிழ் !
ஒப்பற்ற தமிழ் மொழியை உருக்குலைய விடலாமா ?
உலகம் முழுவதும் ஒலிக்கும் மொழி சிதையலாமா !
சில நுறு ஆண்டுகள் வரலாறு உள்ள மொழிகள்
சதிராட்டம் போட்டு குதியாட்டம் போடுகின்றன !
பல்லாயிரமாண்டு வரலாறு உள்ள தமிழ் மொழியை
பாதுகாக்க வேண்டியது உலகத்தமிழரின் கடமை !
இலக்கண இலக்கியங்களின் இமயம் தமிழ் மொழி
இனிக்கும் கேட்க கேட்க இனிக்கும் நம் தமிழ் !
தமிழர்களே தமிழர்களோடு தமிழில் மட்டும் பேசுங்கள்
தமிழர்களே ஆங்கில மோகத்தை அறவே அழியுங்கள் !
தமிங்கில உரையாடலுக்கு முடிவுரை எழுதுங்கள்
தமிழை தமிழாக மட்டும் பேசிப் பழகுங்கள் !
சிங்கப்பூரில் ஆட்சிமொழியாக சிங்காரத் தமிழ்
சிங்களத்தோடு தமிழும் ஆட்சிமொழி இலங்கையில் !
பன்னாட்டு மொழி என்ற தகுதி உள்ள தேசிய மொழி
பண்பாட்டை பலருக்கும் பயிற்றுவிக்கும் மொழி !
உலகம் உருவானபோது உருவான மொழி
உலகம் உள்ளவரை காப்பது நமது கடமை !
தமிழ் படித்ததால் தரணியில் சிறந்தோர் பலர்
தமிழைக் கற்போம் குழந்தைகளுக்கும் கற்பிப்போம் !
முதல்மொழிக்கு முதலிடம் கொடுப்போம் உள்ளத்தில்
மற்ற மொழிக்கு இரண்டாமிடம் கொடுப்போம் மனதில் !
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் நடைமுறைப் படுத்துவோம்
எவர் தமிழை எதிர்த்தாலும் பாடம் புகட்டிடுவோம் !
நன்றி !
கவிஞர் இரா. இரவி