உலக பூமி தினம்
உமிழ்ந்தாலும்
உதைத்தாலும்
உள்ளம் கனிந்து
உங்களை சுமப்பேன்
பூமி….
மரங்கள்யெல்லாம்
தவம் புரிந்திடும்
தாய்மடியாய் என் மீது
பூமி…
மலைகளும் பீடபூமிகளும்
எனக்கோர்
மகுடமானது
பூமி…
தோண்டினாலும்
தொய்வடையாது
தோள்கொடுத்து
காத்திடுவேன் தோழனாய்
பூமி….
பிளவு படுத்தி
பார்த்தாலும்
பிணக்கு இல்லை
எனக்கோர் கருணை
உள்ளம்
பூமி…
கணங்களன்று
கானகங்களை
தாங்கினேன்
பூமி…
எல்லையில்லா கடலும்
எனக்குள் அடக்கம்
பூமி…
மனம் கணமற்றதால்
என்னுலும் பொன்னை
வைத்தேன்
பூமி…
வேறுபாடில்லை
எனக்கோர் மேலோர்
கீழோர் அன்று
பூமி…
மேன்மையானவரை
மென்மையாகவும்
வண்மையானவரை
வளமையாவும்
பூமி….
இன்னுயிர்யெல்லாம்
இனிமையாய் வாழ்ந்திடும்
என் மேனியில்
பூமி….
பூக்கெல்லாம் பூத்து
மகிழ்ந்திடும் பூந்தோட்டம்
என் மெய்
பூமி….
நன்றி
கவிஞர் மா.கணேஷ்