திருக்குறள் கவிஞர் இரா .இரவி
வேதங்களை விட
உயர்வானது
திருக்குறள்
சாஸ்திரங்களை விட
மேன்மையானது
திருக்குறள்
துன்ப இருள் அகற்றும்
இன்ப ஒளி ஏற்றும்
திருக்குறள்
அறிவுப் போதிக்கும்
அற்புத ஆசான்
திருக்குறள்
வெறிப் பிடித்தவரையும்
படித்தால் நெறிப்படுத்தும்
திருக்குறள்
இலக்கியங்களின் இமயம்
இனிய கருத்துக்களின் சுரங்கம்
திருக்குறள்
டால்ஷ்டாய் காந்தியடிகள் நேசித்தது
குன்றக்குடி அடிகளார் பூசித்தது
திருக்குறள்
முக்காலமும் பொருந்தும்
முக்கனி
திருக்குறள்
ஈராயிரம் வயது கடந்தும்
இன்னும் இளமையாக
திருக்குறள்
வாழ்வியல் நெறி
வாசிப்பவருக்கு கற்பிக்கும்
திருக்குறள்
காலத்தால் அழியாத
கல்வெட்டு இலக்கியம்
திருக்குறள்
ஒன்றே முக்கால் அடிகளில்
உலகம் அளந்த
திருக்குறள்
ஈடு இணையற்ற
இனிய நூல்
திருக்குறள்
தமிழர்களின் வாழ்வில் நின்று
தமிழர்களின் பெருமையில் ஒன்றானது
திருக்குறள்
அகிலம் முழுவதும்
அறியப்பட்ட நூல்
திருக்குறள்
அறிஞர்கள் பலர்
உருவாகக் காரணம்
திருக்குறள்
நன்றி கவிஞர் இரா இரவி