உறவுகள்வாழ்வியல்

எதிர் நோக்கி ! சிறுகதை…

      அன்புமிகு ஓர் அழகிய சிறுகுடும்பம் தந்தை தாய் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள்யென வாழ்வில் வளமையை நோக்கி நகர்ந்து செல்லும் குடும்பம். அக்குடும்பத்தின் திடீர் வளமைக்கு காரணம் குடும்பத் தலைவர் குருசாமியை பிடித்த இருந்த மது பிரியத்தை அவர் விட்டு குடும்பத்திற்காக உழைக்க ஆரம்பித்ததே.

      இவர்களின் வீட்டிற்கு  அருகே உள்ள வயலின் வரப்பு பொந்தில் புதியதாக பிறந்த நான்கு பாம்பு குட்டிகளுடன் ஒரு பாம்பும் வாழ்ந்து வந்தது.

           குடும்பத் தலைவரான கூலி வேலை செய்யும் குருசாமி மது பிரியத்தை விட்டு மனம் திருந்தி வேலைக்கு சென்று தினம் தான் பெற்ற ஊதியப் பணத்தில் வேலை முடிதத்து வீட்டுக்கு திரும்பும் போது பிள்ளைகளுக்கும் குடும்பத்திற்கும் தேவையானவற்றை வாங்கி வருவார். அதே போன்று தினம் இரைத்தேடி வெளியே செல்லும் பாம்பு இரைகளை கொண்டு வந்து தன் குட்டிகளுக்கு கொடுத்து மகிழும்.

         இவ்வின்பம் நீண்ட நாள்கள் நிலைக்கவில்லை யார் கண் பட்டதோ தெரியவில்லை. அன்று வேலை முடித்து ஊதியத் தொகையை பெற்றுக் கொண்டு குருசாமி வீட்டிற்கு புறப்படும் வேலையில் அங்கு அவரது பழைய நண்பர் வரவே இருவரும் சிறிது நேரம் பேசினார்கள் சரி வருகிறேன் என்று குருசாமி புறப்படும் பொழுது தனக்கு மது வேண்டும்யென நண்பர் கேட்கவே நான் இப்போது குடிப்பதில்லைஎன்று கூறினார். ஆனால் நண்பர் அவரை விடாமல் வற்புருத்தி வாங்கியும் மீண்டும் அவரையும் குடிக்க வைத்தார். இதனால் அன்று வேலை பார்த்த கிடைத்த  அனைத்து பணத்திற்கும் மது வாங்கி குடித்து மகிழ்ந்தனர். ஒரு கட்டத்தில் குருசாமி அதிக மதுவால் மயங்கி கீழே விழுந்தார். விழுந்தவர் மீண்டும் எழவில்லை ஏன் என்றால் அவர் மரணம்  அடைந்தார்.

அதே நாள் இரைத் தேடச் சென்ற பாம்பு இரையை பிடித்து  தன் குட்டிகளுக்கு கொடுக்க திரும்பும் போது ஆகாயத்தில் கழுகு ஒன்று பாம்பைக் கண்டு விரட்டவே பயந்து ஓடிய பாம்பு அருகில் இருந்த புதரில் உள்ள துளையில் தன் தலையையும் பாதி உடலையும் மறைத்தது. கழகு பாம்பை காணம் என்று அங்கு இருந்து பறந்து சென்றது. கழுகு சென்றதை பார்த்த பாம்பு துளையை விட்டு வெளியே வர நினைக்கும் போது அதனால் வர இயலவில்லை. அப்பொழுது தான் பாம்பிற்கு தெரிந்தது அது மண் துளை அல்ல என்று. அது குருசாமியும்  அவரது நண்பரும் குடித்துவிட்டு வீசி எறிந்த மது பாட்டில் என்று அவசரத்தில் உயிரை காப்பாற்ற அதில் நுழைந்த பாம்புக்கு அது பாட்டில் என்று தெரியவில்லை. இறுதியாக பாம்பு தனது  தலையையும் உடலையும் வெளியில் எடுக்க முயற்சி செய்து தோற்று போய் தன் உயிரை விட்டது.

              அன்று மாலை தன் அப்பா தங்களுக்கு தேவையானவற்றை வாங்கி வருவார் என்று பிள்ளைகள் வாசலிலும் தங்களுக்கு இரையோடு பாம்பு வரும் என்று பாம்பு குட்டிகள் தங்கள் பொந்தின் வெளியே எதிர் நோக்கி பார்த்து கொண்டிருந்தனர்.

        இது மட்டுமின்றி நிலமகள் மீதும் பல்வேறு மது பாட்டில்களும் நெகிழி குவளைகளும் மற்றும் நெகிழி பைகளாலும் கொஞ்சம் கொஞ்சமாக மூச்சு விட முடியாது தவித்து வருகிறாள்.

        நிலமகளும் தன் மீது உள்ள மாசுகள் நீங்கி என்றெனும் ஒரு நாள் தூய்மையடைவோம் என்று எதிர் நோக்கி காத்துக் கொண்டு இருக்கிறாள்.

நன்றி
கவிஞர் மா.கணேஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *