அறிந்தது மனதில் நின்றது
அறியாதது அறிய வைத்தது
எழுத்து !
மனிதனின் வளர்ச்சிக்கும்
சாதனைக்கும் காரணம்
எழுத்து !
இல்லாத உலகம்
நினைக்கவே அச்சம் !
எழுத்து !
திருவள்ளுவரை
உலகிற்குக் காட்டியது
எழுத்து !
அறிஞர்கள் கவிஞர்கள்
எழுத்தாளர்கள் மூலப் பொருள்
எழுத்து !
ஒலி வடிவம் வரி வடிவமானது
நாகரீகத்தின் தொடக்கம் மொழியின் உச்சம்
எழுத்து !
தோன்றாமல் இருந்திருந்தால்
ஆதிவாசியாகவே இருந்திருப்பான்
எழுத்து !
அறிவு வளரவும் ஆள் வளரவும்
உதவியது
எழுத்து !
பார்வையற்றவர்களும்
தடவி உணரும் உன்னதம்
எழுத்து !
ஆற்றலையும் வீரத்தையும்
பறை சாற்றியது கல்வெட்டு
எழுத்து !
காவியம் காப்பியம்
காத்தது ஓலைச்சுவடி
எழுத்து !
நன்றி !
கவிஞர் இரா. இரவி

Warning: Attempt to read property "term_id" on bool in /home/u859506492/domains/tamildeepam.com/public_html/wp-content/themes/flex-mag/functions.php on line 982