பிறமொழியைக் கலக்காதே தம்பி! தம்பி! பிழைபட்டுத் தமிழ் தவிக்கும் வெம்பி! வெம்பி!கவிஞர் இரா. இரவி. Poet Ira.ravi
பிறமொழியைக் கலக்காதே தம்பி! தம்பி!
பிழைபட்டுத் தமிழ் தவிக்கும் வெம்பி! வெம்பி!
அழகிய தமிழ் மொழியுடன் தம்பி
ஆங்கிலத்தைக் கலப்பது ஏனோ?
எல்லா வளமும் உள்ள மொழி தமிழ்
எதற்காக கலக்க வேண்டும் பிறமொழி!
உணவில் கலப்படம் செய்வது குற்றம்
உன்னத தமிழில் கலப்படமும் குற்றமே!
நல்ல தமிழ் பேசுவது நல்லது தம்பி
நல்ல தமிழ் எழுதுவது நல்லது தம்பி!
பாலோடு நஞ்சைக் கலப்பது சரியா?
பைந்தமிழோடு ஆங்கிலம் கலப்பது முறையா?
தமிங்கிலம் பேசுவது தமிழுக்குக் கேடு
தமிழன் உணர்ந்தால் தமிழ் வாழும்!
படித்தவர் முதல் பாமரர் வரை நாளும்
பேசுகின்றனர் தமிங்கில மொழியை!
ஆங்கிலக் கலப்பின்றி பேசிப் பழகுங்கள்
அன்னைத் தமிழுக்கு மதிப்பை வழங்குங்கள்!
ஆங்கிலேயவன் எவனாவது ஆங்கிலத்தோடு
அழகுத் தமிழை கலந்து பேசுவானா தம்பி ?
முடிந்தவரை நல்ல தமிழில் பேசுங்கள்
முயற்சி செய்து பாருங்கள் வந்துவிடும்!
பாலில் உள்ள தண்ணீரை பிரித்துக் குடிக்கும்
பறவையான அன்னப்பறவையைப் போல!
பேச்சுவழக்கில் உள்ள ஆங்கிலத்தை நீக்கி
பைந்தமிழை தமிழாகவே பேசிடு தம்பி.
https://tamildeepam.com/யானை-கவிஞர்-இரா-இரவி-poet-ira-ravi/(opens in a new tab)

Warning: Attempt to read property "term_id" on bool in /home/u859506492/domains/tamildeepam.com/public_html/wp-content/themes/flex-mag/functions.php on line 982