பத்தாயிரம் மையில் பயணம்! வெ. இறையன்பு V. Irai Anbu (காஃபியின் கதை)
V. Irai Anbu (Tamil: வெ. இறையன்பு) is an IAS Officer, writer, educator, social activist and motivational speaker. He is the current Chief Secretary of Tamil Nadu Government .
பத்தாயிரம் மையில் பயணம்!
சிறுகதைகள் : காஃபியின் கதை
இஸ்லாமிய நாடுகளிலிருந்து , இத்தாலிக்கும் பிறகு ஐரோப்பிய நாடுகளுக்கும் அங்கிருந்து இந்தோனேசியாவிற்கும் பிறகு அமெரிக்காவிற்குமாக உலகம் முழுவதும் பயணம் செய்த காஃபியின் பயணப்பாதை நீளமானது.
காஃபியின் கதை சுவாரசியமானது. இன்று 70 உலக நாடுகளில் அது பயிரிடப்படுகிறது. பெட்ரோலியத்திற்கு அடுத்து அதிகமாக விற்பனையாகிற பொருள் காஃபி மற்ற பானங்களைப் போலவே காஃபியும் தற்செயலாகவே கண்டுபிடிக்கப்பட்டது . நைல் நதி தலையைத் துவட்டும் எத்தியோப்பியாவில்தான் அது முதலில் விளைந்தது.
வெகுநாட்கள் கவனிப்பாரற்று இருந்த அது 9ஆம் நூற்றாண்டில் ஆடு மேய்க்கும் ஒருவரால் முதலில் அறியப்பட்டது. மேய்ச்சலுக்குச் சென்ற ஆடுகள் அன்று மாத்திரம் திடீரென்று எக்கச்சக்கமாக குதி ஆட்டம் போடுவதை கண்ட கால்தி என்கிற அந்த மேய்ப்பன். அவை மேய்ந்த இடத்தில் தேட ஆரம்பித்தான். அப்போது அவை மேய்ந்த இடத்தில் சிவப்பு நிறமாக சில பழங்கள் இருப்பதே முதல்முறையாகக் கண்டான். அவையே தன் ஆடுகளைத் தூண்டியிருக்க வேண்டும் என்பதை உணர்ந்தான். ஆனாலும் அதை பானமாகப் பயன்படுத்தும் பழக்கம் அப்போது ஏற்படவில்லை .
அரேபியாவில் தான் அது குடிக்கிற ஆகாரமாக உருவெடுத்தது. சொர்க்கத்திலிருந்து காஃபி நேரடியாக வந்ததாக புனைவியல் கதை ஒன்றை அரேபியாவில் உண்டு. இறைத்தூதர் முகமது நபி புனிதயாத்திரை மேற்கொள்ளும் போது தனக்கு வலிமையை தரும்படி அல்லாவை வேண்டினார் .அவருக்கு மெக்காவில்புனிதக்கல்லைப் போல கருத்திலும் ஒன்று பிரசாதமாகக் கிடைத்தது. அவர் அதை குடித்த உடன் புத்துணர்ச்சி பெற்றார் என்பது அந்த உருவகத்தை .அதுவே ‘காவா‘ என்கிற பெயரில் அரேபிய மொழியில் அழைக்கப்பட்டது. இன்றும் அந்த பெயரிலேயே காஃபி அந்தப் பகுதியில் அழைக்கப்படுகிறது.
காஃபி ஏமன் நாட்டுக்கு பரவிய சம்பவமும் சுவையானது. சூடான் நாட்டிலிருந்து ஏமனுக்ககு எடுத்துச் செல்லப்பட்ட அடிமைகள் காஃபியின் ரசம் நிறைந்த சதைப்பகுதியை சாப்பிட்டுவிட்டார்கள். அவர்கள் மோச்சா என்கிற துறைமுகத்தின் வழியாக எடுத்துச் செல்லப்பட்டார்கள். அப்படித்தான் ஏமன் நாட்டிற்கு அது முதலில் வந்தது. ஏமன் நாட்டு அதிகாரிகள் காஃபி குடிப்பதை அதிக அளவில் தொடக்கத்தில் ஊக்கப்படுத்தினார் . காரணம் காட் என்கிற செடியின் இலைகளையும் மொட்டுகளையும் துண்டுதலுக்காக அந்த மக்கள் பயன்படுத்தி வந்தனர். பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் அதற்குப் பதிலாக காஃபியை அருந்துவது நல்லது என்று நினைத்தார்கள்.
காஃபியை ஒரு இஸ்லாமிய பானம் என்று மேற்கு நினைத்தது. எனவே, அதை தடை செய்ய வேண்டும் என்றும் கூட பலமுறை கடுமையான எதிர்ப்புகள் எழும்பின.
முதல் முதலில் மெக்காவின் காஃபி கடைகள் ஆரம்பிக்கப்பட்டன. பிறகு அவை அரேபிய உலகம் முழுவதும் ஆரம்பிக்கப்பட்டன. அங்கு சதுரங்கம் விளையாடுவது அடுத்தவர்களைப் பற்றி புறம் பேசுவது ஆடுவது பாடுவது போன்ற செயல்கள் தொடர்ந்தன. வர்த்தகம் நடக்கும் இடமாகவும் அவை மாறின. நாளடைவில் அரசியல் நடவடிக்கைகளுக்கும் அவை மையமாயின.அதனால் காஃபி கடைகள் சில காலம் தடை செய்யப்பட்டது பிறகு அவற்றை வரிவிதிப்பின் மூலம் கட்டுப்படுத்தினர்.
ஏமனிலிருந்து துருக்கிக்கு காஃபி எடுத்துச் செல்லப்பட்டது. பதினைந்தாம் நூற்றாண்டில் அரேபியாவில் காஃபி அருந்தும் பழக்கம் பிரபலமானது. கீழே நாடுகளுக்குப் பயணம் செய்த ராஉல்ப் என்கிற ஜெர்மனி மருத்துவர் 1583 காஃபியைப் பற்றி சுவையான குறிப்பு ஒன்றைத் தன் பயண அனுபவத்தில் குறிப்பிட்டிருக்கிறார் . “மையைப் போல கறுப்பான திரவம் – பல வியாதிகளை குணப்படுத்த வல்லது“. குறிப்பாக வயிற்று வலிக்கு நல்லது. நுகர்பவர்கள் அதைக் காலையில் அருந்துகிறார்கள். வெளிப்படையாக ஒரு கோப்பை நிறைய அருந்துகிறார்கள் .
‘சுபி’ தத்துவம் இஸ்லாமிய நாடுகளில் எல்லாம் பல்வேறு பிரிவுகளாகப் பரவ ஆரம்பித்தது. அவர்கள் எகிப்து நாட்டுக்குத் தங்கள் கொள்கைகளைப் பரப்பச் சென்றபோது காஃபியும் பரவியது. குர்ஆனைப் பாடும்போது சுபி சந்நியாசிகள், ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் , கையில் விளிம்புவரை நிறைய காஃபியோடு இறைமையைத் துதித்து ஒன்றிப் போவார்கள். மெய்மறந்த நிலையை அடைவதற்கு , காஃபி உறுதுணையாக இருந்தது. ஒரு மிகப்பெரிய மண்குவளையில் இருக்கும் காஃபியை அனைவரும் அள்ளிக்குடிப்பது அவர்களின் சடங்காக இருந்தது. ஜென்னில் தேநீர் எந்த முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறதோ, அந்த முக்கியத்துவம் சுபியில் காஃபிக்கு இருந்தது .காஃபியை ஓர் இஸ்லாமிய பானம் என்று மேற்கு நினைத்தது .எனவே அதை தடைசெய்ய வேண்டும் என்றும் கூட பலமுறை கடுமையான எதிர்ப்புகள் எழும்பின. ஆனால் போப் எட்டாம் கிளமென்ட் 1600 இல் காஃபி எல்லோருக்குமான பானம் என்று எதிர்ப்பினை மீறி அறிவித்தார்.
இஸ்லாமிய நாடுகளிலிருந்து இத்தாலிக்கும், பிறகு ஐரோப்பிய நாடுகளுக்கும், அங்கிருந்து இந்தோனேசியாவிற்கும் பிறகு அமெரிக்காவிற்கும் காஃபி பரவியது. இத்தாலிய வியாபாரிகள் வந்தபோது, அவர்களுக்கு துருக்கியர்கள் காஃபியை பரிமாறினார்கள். தாங்கள் வந்த பயணத்தின் நினைவாக அந்த வியாபாரிகள் இத்தாலிக்கு காஃபியை எடுத்துச் சென்றனர். துருக்கியர்கள் போரின் போது விட்டு விட்டு ஓடிய சில சாக்குப்பைகளில் இருந்த காபி ஆஸ்திரியார்களின் எடுத்துச் சென்று, அவர்கள் நாட்டில் பயிரிட்டார்கள். 1615 இல் ஐரோப்பாவிற்கு காஃபியை எடுத்துச் சென்றார்கள். அந்த சமயத்தில் தான் ஸ்பெயின் நாட்டில் சாக்லேட் பண்ணனும், தேநீரும் அறிமுகப்படுத்தப்பட்டன. ரச்சுக்காரர்கள் 1616 இல் தங்கள் நாட்டிற்கு அதை எடுத்துச் சென்றார்கள். அவர்கள் இந்தியாவிலும் தங்கள் காலனிக்குட்பட்ட மலபார் பகுதிகளில் காஃபியை பயிரிட ஆரம்பித்தார்கள்.
காஃபி உலகம் முழுவதும் பயணம் செய்த போது ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பெயரில் அழைக்கப்பட்டது. காஃபியினால் ஒரு மிகப்பெரிய பல்லக்கு வழி உதயமானதாக வரலாறு கூறுகிறது. அவை ஏமனில் இருந்த கப்பல்களில் காஃபி கொட்டைகளை ஏற்றி செங்கடல் வழியாக டெமாஸ்கஸ் வரை தரை வழியாகவும், நைல் நதி வழியாகவும் பயணப்பட்டதாக வரலாறு குறிப்புகள் உள்ளன. கப்பல் போக்குவரத்து மூலமாக 16-ம் நூற்றாண்டில் அது பரவ ஆரம்பித்தது. மோச்சா என்கிற துறைமுகம் காஃபி வர்த்தகத்திற்காகவே விரிவுபடுத்தப்பட்டது. ஏமன் நாட்டில் மிகப்பெரிய வருவாயை காஃபி ஈட்டி தந்தது.
ஒருவரின் எதிர்காலத்தை காஃபியை வைத்து அனுமானிக்கின்ற ஒரு கலையும் மேற்கத்திய நாடுகளில் உண்டு. இன்றும் கூட இத்தாலி நாட்டின் தெற்கு பகுதியில் இப்படி ஒரு ஜோதிடம் உண்டு. அதற்கு பெயர் டேஸியோமன்ஸி (Tasseomancy). ஒருவர் காஃபியை குடித்த பிறகு மிச்சம் இருந்ததோடு கோப்பையை அப்படியே சாசரின் மீது கவிழ்த்து விட வேண்டும். பிறகு, அந்த காஃபியை எந்த வடிவத்தில் கோப்பையில் பரவி இருக்கின்றது என்பதை பார்த்து, அதைக் கொண்டு ஒருவரின் எதிர்காலத்தை சொல்வது டேஸியோமன்ஸி. கோப்பையில் இருக்கின்ற சுவடு எதிர்காலத்தையும், சாசரில் இருக்கின்ற வடிவம் நிகழ்காலத்தியும் கூறுவதாக அவர்கள் நம்புகிறார்கள். ஆனால், உண்மையில் காஃபிக் குவளைகளில் தான் சிலருடைய எதிர்காலம் நிரம்பிக் கிடைக்கிறது.
Thanks to
வெ.இறையன்பு
பத்தாயிரம் மையில் பயணம்!
பத்தாயிரம் மையில் பயணம்! வெ. இறையன்பு V. Irai Anbu (காஃபியின் கதை)
👇👇👇👇👇👇👇
சிறுகதைகள் : கோப்பைகளில் பயணித்த தேனீர்
https://tamildeepam.com/tamil-deepam-aadhiya-kadhai-irai-anbu-tea-tamildeepam/
சிறுகதைகள் : சாக்லேட் சுவடுகள்
https://tamildeepam.com/tamil-deepam-kadhai-irai-anbu-travel-by-ten-thousand-chocolate-tamildeepam/